Twitter Twitter Delicious Facebook Digg Stumbleupon


பெற்றோர் மாநாடு வீடியோ உரை - 3 1

ஸலாம்.

சகோதரர் CMN சலீமின் உரை முழுவதுமாக பதிவு செய்து வெளியிட முடியவில்லை.

கல்வியில் ஏன் பின்தங்கினோம்?,
யார் காரணம்?,
எத்தகைய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்?,
அதற்கான காலகட்டம் என்ன?,
எவ்வளவு காலம் பொறுத்திருக்க வேண்டு்ம்?, என்ற வரலாற்று குறிப்புகள் கல்விக்காக பாடுபடும் ஒவ்வொருவர் மனதிலும் பதிய வேண்டும். "பள்ளிகளோடு இணைந்த மாதிரி மக்தப்களை உருவாக்குவதே, இழந்த நம் தலைமுறை கல்வி கோட்பாடுகளை மீட்டெடுக்க ஒரே வழி" என்ற சலீமின் அழைப்பு மிகுந்த சக்தி வாய்ந்தது என்பதை நாம் உணர்கிறோம்.

மேலாதிக்க ஆக்ரமிப்பாளர்கள் - ஆங்கிலேயர்கள் - பிரிட்டிஷ்காரர்கள் - உலகின் பலபகுதிகளை தங்களது வன்முறையால் அடிமைப்படுத்தத் துவங்கிய காலகட்டத்தில் முதல் வேலையாக அவர்கள் செய்தது. பள்ளிவாசல்களுடன் இணைந்த கல்விக்கூடங்களை தகர்த்ததுதான் என்ற உண்மையை உரக்க முழங்கினார்.

இஸ்லாமிய அடையாளங்களை, கல்வித்தரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றைய முஸ்லிம்கள் சிந்திய இரத்தமும், உயிரும் எடுத்துக்காட்டப் பட்டபோது மனகணத்துடன் கண்கள் கசிந்தன.

என்ன செய்யப் போகிறோம் என்ற மனக் கேள்வியுடன் அந்த வீடியோவைப் பதிக்கிறேன்.

1 Responses So Far:

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ said...

ஸலாம்....

உலக முழுவதும் வாழும் பரங்கிப்பேட்டை சகோதரா சகோதரிகளுக்கு பயன்தரும் வகையில் மாநாட்டு உரைகளை வெளியிட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஒரு வேண்டுகோள்:

வீடியோ தொகுப்பில் அனைத்து பேச்சாளர்களுக்கும் சரிசமமான வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பகுதி 2ல் ஆலிம் அல்லாத ஒருவருக்கு 7 நிமிடங்களுக்கு அதிகமாகவும், சுன்னத் வல் ஜமாஅத் அறிஞருக்கு 4 நிமிடங்களுக்கு குறைவாகவும் இடம் அளித்திருப்பது சற்று நெருடலை ஏற்படுத்துகின்றது.

அனைவரும் சிறப்பாக உரையாற்றினார்கள் என்று பொதுவாக சொல்லிவிட்டு போவதை விட அதை மக்களுக்கு தெரியபடுத்துவதிலும் நடுநிலையை கையாண்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து.

மக்களுக்கு செய்தியை எடுத்துரைப்பது சிறந்த பணிதான். அதை மறுப்பதிற்கில்லை. ஆனால், அது ஒரு சார்பு செய்தியாக இருந்து விடக்கூடாது என்பதுதான் என் விருப்பம்.


--
என்றும் மாறா அன்புடன்...

குவைத்திலிருந்து...

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

 
Rozor-V3 Copyright © 2011 Razor Theme V3 is Designed by Sameera Chathuranga