Twitter Twitter Delicious Facebook Digg Stumbleupon


பெற்றோர் மாநாடு (பிப்ரவரி - 7) 2

ஸலாம்.


பிப்ரவரி 7ம் தேதி நடந்து முடிந்த "பெற்றோர்கள் மாநாடு" வீடியோ பதிவு முதல் பகுதி.


கஸ்ஸாலி இமாமின் இஹ்யாவுல் உலூமித்தீன் புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட ஒரு சம்பவத்தை (அல்லாஹ்வை நினைவுக்கூர்வதற்கென்று நபி(ஸல்) நிறைய திக்ருகளை சொல்லிக் கொடுத்திருக்கும் போது இஹ்யாவிலிருந்து எவரோ சொன்ன திக்ர் தேவையா என்பதை பேச்சாளர் யோசித்திருக்க வேண்டும்) தவிர மற்ற உரைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன.


பெரிய குறைப்பாடுகள் என்று சொல்லும் படி எதுவும் இல்லையென்றாலும் பேச்சாளர்கள் உரை சப்தத்தை விட பெண்கள் தரப்பிலிருந்து பேச்சு சலசலப்பு தொடர்ந்து வந்தன. (வருபவர்களின் முழு கவனமும் பேச்சாளர்களின் பக்கம் இருக்கும் படி ஒளி, ஒலி அமைப்பு, இதர ஏற்பாடுகள் செய்யப்படுவது மிக அவசியமாகும்).


மிக நெடிய திரைப் போட்டு பெண்கள் பகுதியை அடைத்தார்கள். (இத்துனை அடைப்பு அவசியமா என்பது புரியாமலே போய்விட்டது).


ஜிஎன்






2 Responses So Far:

இப்னு ஹம்துன் said...

மாநாடு பற்றிய விபரமான வீடியோப் பதிவுக்கு நன்றி. வீடியோக்களும் நல்ல தரம்.

"பேச்சாளர் யோசித்திருக்க வேண்டும்" என்று எழுதியிருப்பதைத் தவிர்த்திருந்திருக்கலாம். 'எல்லோரும்' யோசித்திருந்தால் ஏன் இத்தனை பிரிவுகள்.
"முஸ்லிம் பெற்றோர்" மாநாடு என்பதால் இஸ்லாமின் எல்லா கருத்தியல்(School of Thoughts)களிலும் உரைகள் இருக்கத்தான் செய்யும்.

அப்துல்காதர் மதனியின் கருத்துரை சிறப்பாக இருந்தது. ஆயினும், பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களாகச் செய்யும் விதத்தில் 'கலந்துரையாடலாக' நிகழ்ச்சியைக் கொண்டுச் சென்றிருக்கவேண்டும். பெற்றோர்கள் கருதுகிற/எதிர்கொள்கிற பிரச்னைகள் குறித்து பெற்றோர்கள் சார்பாக ஓரிருவரை பேசவிட்டு மார்க்க அடிப்படையில் அதற்கு தீர்வு நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.

என்னைக் கேட்டால், பெண்களும் (ஒலிபெருக்கி (அ) எழுதுகோல் வழியாக)கருத்துச் சொல்ல அனுமதித்திருக்க வேண்டும்.ஆச்சர்யமான பல கருத்துகளை கிடைத்திருக்கக் கூடும்
('பெற்றோர்' என்பதன் பெரும்பங்களிப்பை அவர்களே செய்துவருகிறார்கள்).

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ said...

ஸலாம்....

நம்முடைய இந்த இஸ்லாமிய பெற்றோர்கள் மாநாடு மிகவும் சிறப்பாக நடந்ததை செவியுற்றபோது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.

அல்லாஹ்விடம் மட்டுமே நற்கூலியை எதிர்ப்பார்த்து, இந்த மாநாட்டுக்காக தன்னுடைய நேரத்தையும், உழைப்பையும் கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், சிங்கப்பூர் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்களுக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றியினையும் சலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ், மேலும் இதுபோன்ற தேவைக்கேற்ப நிகழ்ச்சிகளை நம்மூரில் நடத்திட எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

நம்மூர் இளைய சமுதாயத்திற்காக நாம் அனைவர்களும் துஆ செய்வோமாக. ஆமீன்.

-------------------------------------

உலக முழுவதும் வாழும் பரங்கிப்பேட்டை சகோதரா சகோதரிகளுக்கு பயன்தரும் வகையில் மாநாட்டு உரைகளை வெளியிட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஒரு வேண்டுகோள்:

வீடியோ தொகுப்பில் அனைத்து பேச்சாளர்களுக்கும் சரிசமமான வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பகுதி 1ல் தன் கொள்கை சார்ந்த அறிஞருக்கு 7 நிமிடங்களுக்கு அதிகமாகவும், வேறு கொள்கை (சுன்னத் வல் ஜமாஅத்) அறிஞருக்கு ஒன்றரை நிமிடங்களுக்கு குறைவாகவும் இடம் அளித்திருப்பது சற்று நெருடலை ஏற்படுத்துகின்றது.

அதிலும், அவர் ஆற்றிய உரையில் மட்டும் ஏதோ குற்றம் கண்டு பிடித்துவிட்டதை போன்று ''பேச்சாளர் யோசித்திருக்க வேண்டும்'' என்று அறிவுரை சொன்னதும் செய்தி அளித்தவர்களின் மனநிலையை நடுநிலைவாதிகள் யோசிக்க வேண்டிய செய்தியாக உள்ளது.

--
என்றும் மாறா அன்புடன்...

குவைத்திலிருந்து...

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

 
Rozor-V3 Copyright © 2011 Razor Theme V3 is Designed by Sameera Chathuranga