Twitter Twitter Delicious Facebook Digg Stumbleupon


நகர ஜமாஅத்துல் உலமா பேரவை 3

பரங்கிப்பேட்டையில் நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பாக "கோடைக்கால தீனியாத்" வகுப்புகள் நடத்தப்பட்டு பயிற்சிப்பெற்றப் பிள்ளைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியு்ம், மார்க்க உரைகளும் நடைப்பெற்றது. (3-05-2011)

ஆரம்ப முதல் இறுதி வரை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் அஸர் முதல் மஃரிபு வரை கலந்துக் கொண்டோம்.

சிறு குழந்தைகள் மேடையில் அஸ்மாவுல் ஹுஸ்னா (இறைப் பெயர்கள்) அர்த்தத்துடன் சொன்ன விதமும். அதன்பிறகு ஒரு பெண் குழந்தை கிராஅத் ஓதிய விதமும் பாராட்டத்தக்க விதத்தில் அமைந்திருந்தது. குழந்தை ஓதிய கிராஅத்தின் உச்சரிப்புகள் மிக நேர்த்தியாக இருந்தன. இந்தப் பணிக்காக முயன்றுக் கொண்டிருக்கும் பயிற்சியாளர்களுக்கு அல்லாஹ் அருள்புரியட்டும்.

வழக்கமான மேடை, சிறு உரைகள் நடந்தன. சொல்லும் படியாக ஒன்றும் இல்லை. பிறகு அமீரக வருகையாளர் என்ற அறிமுகத்துடன் நண்பர் கவுஸ்மெய்தின் உரைத் துவங்கியது.







மிக சிறந்த உரை. பல்கலை கழகத்தில் ஆய்வுக் கட்டுரை சமர்பிப்பது போன்று அழுத்தமாக பேசினார். அவரது உரையில் சில மாற்றுக் கருத்து நமக்கிருந்தாலும் உரையில் தரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவரது உரை யாருக்கு புரிந்திருக்கும் என்பது பெரிய கேள்விக்குறி.

கூட்டத்திற்கு வந்திருந்த பத்துக்கும் குறைவான ஆண்களில் சிலரிடம் அவர் உரைக் குறித்து கேட்டோம். புரியவில்லை என்ற பதிலே கிடைத்தது. ஆண்களில் நிலையே இதுவென்றால் பெண்களை கேட்கவே வேண்டாம் என்று தோன்றியது.

வந்திருப்பவர்களை கருத்தில் கொண்டே உரை நிகழ்த்தப்பட வேண்டும் அப்போதுதான் நமது செய்திகள் - கருத்துக்கள் - தகவல்கள் அவர்களை சென்றடையும். நண்பரின் உரை, ஆய்வு மனப்பான்மையில் உழைத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மத்தியில் நிகழ்த்தப்பட்டிருந்தால் அவ்வளவு மெளனமாக அவர்கள் உரையை உள்வாங்கி இருப்பார்கள். இப்போது நடத்தப்பட்ட இடத்தை பொருத்து உரை சத்தற்று போயிற்று.

இருப்பினும் நமக்கும் மேடையிலிருந்த சிலருக்கும் உரை மிக பயனுள்ளதாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நகர ஜமாஅத்துல் உலமா பேரவைத் தலைவர் இதுபோன்ற உரைகளை அடிக்கடி கேட்டால் இன்ஷா அல்லாஹ் தெளிவு பெறுவார். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் இதற்கு முயற்சிக்க வேண்டும். இதை நாம் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் உள்ளது.


அவர் பேசும் போது அறியாமையால் நபி(ஸல்) அவர்களின் பெயரை பயன்படுத்தி ஒரு செய்தியை குறிப்பிட்டார் "மதரஸாவிற்கு வந்து குழந்தைகள் அலிப் என்ற ஒரு எழுத்தைக் கற்றுக் கொள்வதன் மூலம் அந்தக் குழந்தையின் பெற்றோரை அல்லாஹ் மன்னிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்" என்று பேசினார். இப்படி ஒரு அறிவிப்பு ஆதாரப்பூர்வமான எந்த நூலிலும் நம்மால் பார்க்க முடியவில்லை.


அவர் போன்றவர்களால் கிதாப்களை நேரடியாக பார்த்து ஆய்வு செய்ய முடியாவிட்டாலும் தரமான மார்க்க உரைகளை கேட்பதன் வாயிலாக அறிவைப் பெற முடியும் என்பதால் இதைக் கூறுகிறோம்.

மார்க்கத்தில் இஃமாஉ ஒன்றிருப்பதாக நண்பர் கவுஸ்மெய்தின் குறிப்பிட்டார். "ஏகோபித்த முடிவெடுத்து (இதற்கு பெயர் தான் இஜ்மாஉ) அல்லாஹ்வுக்கு நாம் தீனை கற்றுக் கொடுக்க முடியுமா? இது அல்லாஹ்வின் மார்க்கமல்லவா? அல்லாஹ் சொல்லாத எந்த விஷயத்தில் இஜ்மாஉ எடுக்கப்பட்டது என்று விளக்கினால் நலம்.

முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் இஜ்மாவிற்கு என்ன வேலை.

மார்க்க தெளிவுக்காக நடத்தப்படும் கூட்டங்களில் மார்க்க தெளிவு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துக் கொண்டால் அனைவருக்கும் நன்மை பயக்கும்.

3 Responses So Far:

Thoobaah said...

இஸ்லாத்தில் இஜ்மா (ஒத்த கருத்து) கிடையாது என்றால் ,Muttafaqun 'Alaihe (முத்தஃபகுன் அலைஹி ) ,அதாவது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீத்கள் என்று ஏன் ஒரு பிரிவு உள்ளது?

மேலும் ஜமா'ஆ என்று ஒன்று ஏன், இஜ்மா இல்லையெனில் ?

ஊர் நண்பன் said...

இறைத்தூதரைப் பின்பற்ற வேண்டும் என்ற இறைக் கட்டளை அடிப்படையிலும், சந்தேகமானவற்றைப் பின்பற்ற வேண்டாம் என்ற இறைக் கட்டளை வழிகாட்டலுமே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் பக்கம் மக்களை ஒருங்கிணைத்ததேத் தவிர எந்தவித அடிப்படையுமில்லாமல் வெறுமனே மக்கள் இதன் பால் ஒன்றுப்படவில்லை. (விரும்பினால் இது குறித்து விரிவாக பேசலாம் இன்ஷா அல்லாஹ்)

ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹதீஸ்களில் அவற்றைத் தொகுத்தவர்கள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு தொகுத்தார்கள் என்பதை ஆய்வு செய்யுங்கள். இது குறித்து மேலும் பேசலாம் என்றால் https://tamilmuslimway.blogspot.com/ வலைப்பதிவில் தொடரலாம்

Gulam Ghouse said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த ஆளுங்களுக்கு இதே வேலைதான்... ஏதாவது மீட்டிங்குக்கு போக வேண்டியது... நல்ல செய்திகள் சிலவற்றை சொல்ற மாதிரி சொல்லி விட்டு குறைகள் என்ற பெயரில் நிறைய அபத்தங்களை அடுக்குவது.

தான் சார்ந்துள்ள கொள்கை(!)யில் உள்ள ஓட்டைகளை பார்ப்பது கிடையாது. சுன்னத் வல் ஜமாஅத்காரன் என்ன செய்றான் என்பதை பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு தேடுவதே இவரைப் போன்ற நபர்களுக்கு வேலையாக போய் விட்டது.

'....ஆரம்ப முதல் இறுதி வரை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் அஸர் முதல் மஃரிபு வரை கலந்துக் கொண்டோம்.....'

இரவு ஒன்பதரை மணி வரை நிகழ்ச்சி நடந்ததே! முழுசாக கலந்து கொண்டு தனது கருத்தை வைக்க வேண்டியதுதானே!

இவரைப் போன்றவர்களால் சீரழிந்துக் கொண்டிருக்கும் இளைய சமுதாயம் குறித்து கலீல் பாகவி பேசினாரே! அதற்கு பிறகு வேலூர் மவ்லானா அப்துல் ஹமீது பாகவி ஹஜ்ரத் அருமையான உரையை வழங்கினார்களே!

இவரைப் போன்றவர்களுக்கு முழுசா கேட்க நசீபில்லை...

'....கூட்டத்திற்கு வந்திருந்த பத்துக்கும் குறைவான ஆண்களில் சிலரிடம் அவர் உரைக் குறித்து கேட்டோம். புரியவில்லை என்ற பதிலே கிடைத்தது. ஆண்களில் நிலையே இதுவென்றால் பெண்களை கேட்கவே வேண்டாம் என்று தோன்றியது....'

பத்துக்கும் குறைவான ஆண்கள் கலந்து கொண்டனர் என்று சொல்வதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறர் இந்த அக்மார்க் தவ்ஹீத்வாதி?

பத்துக்கும் குறைவாகத்தான் ஆண்கள் கலந்து கொண்டார்களா? அல்லாஹ்வுக்கு பயந்து எண்ணிக்கையை எழுத வேண்டும்.

நமக்கு எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணங்கள்தான் முக்கியம் என்று பல இடங்களில் பேசிய இவருக்கு ஆலிம்கள் நடத்திய கூட்டத்திற்கு மட்டும் எண்ணிக்கை முக்கியமாக பட்டுவிட்டது போலும்!

அதைவிட கொடுமை..! இவர் சொற்பொழிவு குறித்து விசாரித்தாராம்... புரியவில்லை என்று சொன்னார்களாம்... ஆமாம்! உண்மைகளை புட்டு வைத்தால் இதுபோன்ற மரமண்டைகளுக்கு புரியாமல்தான் போகும். நாங்கள் விசாரித்த வகையில் எல்லோருக்கும் புரிந்ததாக பதில் கிடைத்தது.

அதுமட்டுமல்ல பெண்களுக்கு சுத்தமாக ஒன்றுமே தெரியவில்லை என்று கவலைப்படுகிறார். அதுபற்றிய மறைவான ஞானம் இந்த அவ்லியா குஞ்சுக்கு எப்படி கிடைத்ததோ?

'....மார்க்கத்தில் இஃமாஉ ஒன்றிருப்பதாக நண்பர் கவுஸ்மெய்தின் குறிப்பிட்டார். 'ஏகோபித்த முடிவெடுத்து (இதற்கு பெயர் தான் இஜ்மாஉ) அல்லாஹ்வுக்கு நாம் தீனை கற்றுக் கொடுக்க முடியுமா? இது அல்லாஹ்வின் மார்க்கமல்லவா? அல்லாஹ் சொல்லாத எந்த விஷயத்தில் இஜ்மாஉ எடுக்கப்பட்டது என்று விளக்கினால் நலம்....'

எனது உரையில் சந்தேகம் இருந்தால் நேரிடையாக என்னிடம் கேட்கலாம் என்று கவுஸ் அவர்கள் சொன்னபிறகும், அவரிடம் கேட்காமல், இங்கு பொதுவில் தனது சந்தேகத்தை வைத்து தனது அறிவுத் திறமையை நிலைநாட்ட துடிக்கிறாரோ இந்த நாலும் கற்ற நல்லவர்.

'....மார்க்க தெளிவுக்காக நடத்தப்படும் கூட்டங்களில் மார்க்க தெளிவு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துக் கொண்டால் அனைவருக்கும் நன்மை பயக்கும்....'

மார்க்கத்தை தெளிவு படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்களைப் போன்ற குழப்பவதிகளுக்கு தெளிவு கிடைக்க வில்லை என்றால் அது நிகழ்ச்சியின் குற்றமல்ல...

இனிமேல் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் திறந்த மனதுடன் செல்லுங்கள்.... அதன் மூலம் நேர்வழி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செல்லுங்கள்... தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகங்காரத்துடனும், ஷைத்தானிய சிந்தனையுடன் செல்லாதீர்கள். நன்றி

 
Rozor-V3 Copyright © 2011 Razor Theme V3 is Designed by Sameera Chathuranga