அல்லாஹ்வின் முகத்திற்கு வருட பாத்திஹா
ஸலாம்.
அல்லாஹ் அப்பழுக்கற்றவன், தூய்மையானவன், அவனுக்கு நிகரானவர் - நிகரானவை எவரும் - எதுவும் இல்லை என்ற இஸ்லாத்தின் தனித்துவமான ஏகத்துவத்தை பாழ்படுத்தி இறைவனின் ஏகபோக கோபத்திற்கு ஆளாகும் செயல்பாடுகள் நம் சமுதாய மக்களால் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
எள்ளளவும், எள்ளின் முனையளவும் கூட இறைவனின் தன்மைகளுக்கு, அவனது ஆற்றலுக்கு நிகரான போக்கு யாரிடமும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற இஸ்லாத்தின் உச்ச உபதேசம் முஸ்லிம்களில் பலரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
நமதூரில் சென்ற ஆண்டு மரணித்த ஒரு பெரியவருக்கு ஆண்டு ஃபாத்திஹா ஓதப்பட்டது. அதற்காக அழைப்பிதழ் அடித்து தேவையானவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. அந்த அழைப்பிதழை பாருங்கள்.
இந்த அழைப்பிதழில் அந்தப் பெரியவரை "வஜ்ஹுல்லாஹ்" (அல்லாஹ்வின் முகம்) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் முகத்திற்கு ஒப்பாவாரா? என்றுக் கூட சிந்திக்கத் தெரியாத அளவிற்கு இவர்களிடம் இஸ்லாமியப் பற்று இருக்கின்றது என்பதை எண்ணி வேதனைப் பட வேண்டியுள்ளது. தனிமனித வழிபாட்டில் இறைத் தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ
அவனைப் போன்று எதுவும் இல்லை (அல் குர்ஆன் 42:11)
அவனைப் போன்று எதுவும் இல்லை என்ற கோட்பாட்டுக்கு எதிராக "இதோ என் முகம் இருக்கின்றது" என்று யாரையாவது குறிப்பிட்டால் இது நிராகரிப்பின் வெளிபாடு கிடையாதா..!
"அல்லாஹ்வின் முகம்" என்றால் அது நேரடியான அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. ஓர் உவமையாக சொல்லப்பட்டது என்று யாராவது சப்பைக் கட்டு கட்டினால் கீழுள்ள குர்ஆன் வசனத்தை அவர்கள் விளங்கி ஈமான் கொள்ளட்டும்.
فَلاَ تَضْرِبُواْ لِلّهِ الأَمْثَالَ إِنَّ اللّهَ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ
அல்லாஹ்வை எதற்கும் உவமையாக்காதீர்கள். அல்லாஹ் நன்கறிபவன், நீங்கள் அறிய மாட்டீர்கள் ( அல் குர்ஆன் 16:74 )
அல்லாஹ்விற்கு உதாரணம் கூறக் கூடாது அவனுக்கு உவமையாக்கக் கூடாது என்ற இஸ்லாமிய இறைக் கோட்பாடு எத்தகைய உவமையையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை விளங்கட்டும்.
கிறித்தவத்தில் ஒரு மனிதர் மட்டுமே இறைத் தன்மைப் பொருந்தியவராக நம்பப்படுகிறார். அந்த நம்பிக்கையே ஒட்டு மொத்த கிறித்தவர்களையும் காஃபிர்கள் என்ற நிராகரிப்பவர்களாக்கி விட்டது.
ஆனால் முஸ்லிம்களில் சிலர், ஹிந்துக் கொள்கையைப் போன்று பலரை இறைத் தன்மைப் பொருந்தியவர்களாக இஸ்லாமிய தெளிவில்லாதவர்கள் ஆக்குகிறார்கள் என்றால் இவர்களின் நிலை என்ன?
இந்தக் கெடுதிகளுக்கு எதிராக நமதூர் ஜமாஅத்துல் உலமாக்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
1 Responses So Far:
உங்க ஊரு காரங்க ஒரு மயிரும் புடுங்க போறதில்லை,.,,,,.....இவனுங்களை எல்லாம் ஒரு தௌஹீத் ஜமாஅத் இல்லை.......................1000 தௌஹீத் ஜமாஅத் வந்தாலும் திருத்தமுடியாது.....................