Twitter Twitter Delicious Facebook Digg Stumbleupon


முஹர்ரம் பிறை 11ல் நோன்பு இல்லை 0

ஊர் நண்பன் | 7:35 AM | , ,

ஸலாம்.

நம்மூர் முஸ்லிம்களிடம் அமல்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் "நகர ஜமாஅத்துல் உலமா பேரவை" மனாருல் ஹுதா மாத இதழிலிருந்து "அல்லாஹ்வின் மாதம்" என்றத் தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் அந்த நோட்டிஸில் விளக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் வைக்க வேண்டிய ஆஷுரா நோன்பு குறித்த விளக்கமும் இடம் பெற்றுள்ளது.

அவர்களுக்கும் நமக்கும் மார்க்க ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் நற்பணிகளுக்கு இறைவன் நற்கூலி வழங்க நாம் பிரார்த்திக்கிறோம்.
அதே நேரம் மார்க்க பெயரில் வெளியிடப்படும் தகவல்களில் தவறுகள் இருந்தால் அதை நாம் சுட்டிக் காட்டியும் வருகிறோம்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள நோட்டிஸில் முஹர்ரம் மாதம் பிறை 9-10 ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு வைப்பது பற்றிய அறிவிப்பும் அதற்கான தெளிவான ஆதாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. தொடரும் விளக்கத்தில் 9-10ல் நோன்பு வைக்கலாம் அல்லது 10-11ல் நோன்பு வைக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டு பிறை 11 லும் நோன்பு வைக்க ஆதாரமாக அஹ்மதிலிருந்து ஒரு ஹதீஸை அந்த மாத இதழ் பதிவு செய்ததை வெளியிட்டுள்ளார்கள்.

யூதர்களை நாம் பின்தொடரக் கூடாது என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் யூதர்கள் நோன்பு வைப்பதற்கு முந்தைய தினமான பிறை 9ல் நோன்பு வைக்க ஆவல் கொண்டார்கள். அது சுன்னத்தாகவும் ஆக்கப்பட்டுள்ளது. பிறை 11ல் நோன்பு வைக்கலாம் என்றால் பிறை 10ல் நோன்பு வைக்கும் யூதர்களைத் பின் தொடர்ந்து அடுத்த நாள் நோன்பு வைத்தது போன்றாகி விடும். அமல்களில் வேதக்காரர்களான யூத - கிறிஸ்தவர்களுக்கு முந்தி முஸ்லிம்கள் செல்ல வேண்டும் என்பதே இஸ்லாமிய நிலைப்பாடு.

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமைத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான புகாரி - முஸ்லிம் நூல்களின் அறிவிப்புகளை படித்து சிந்திப்பவர்களுக்கு இது விளங்கும். எனவே பிறை 11ல் நோன்பு வைத்து யூதர்களை பின்தொடரும் நிலையை நபி(ஸல்) ஏற்படுத்தி இருக்க மாட்டார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக,
பிறை 10ல் நபி(ஸல்) நோன்பு வைத்துள்ளார்கள். இது யூதர்கள் கொண்டாடும் தினமாயிற்றே.... என்று சுட்டிக்காட்டப்பட்டவுடன் அடுத்த வருடம் இறைவன் நாடி உயிருடன் இருந்தால் பிறை 9ல் நோன்பு வைப்பேன் என்று நபி(ஸல்) கூறுகிறார்கள். இங்கு முக்கியமாக நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவென்றால் பிறை 10ல் நோன்பு வைத்த நபி(ஸல்) அதற்கு அடுத்த நாளான பிறை 11ல் நோன்பு வைக்க என்ன தடை இருந்தது?! அடுத்த வருட பிறை 9 வரை காத்திராமல் பிறை 11ல் நோன்பு வைத்து காட்டி இருக்கலாமே.... அப்படி எந்த அறிவிப்பும் இல்லையே... எனவே பிறை 11ல் நோன்பு வைப்பது சுன்னத்தாகாது என்பதை விளங்கலாம்.

"எங்களுக்கு இந்த விளக்கமெல்லாம் தேவையில்லை, பிறை 11ல் நோன்பு வைக்க ஹதீஸ் வந்துள்ளது என்று உலமாக்கள் வாதிக்க முற்பட்டால் அப்போதும் அந்த வாதம் பலவீனப்பட்டுப் போகும். ஏனெனில் அஹ்மதில் இருப்பதாக அவர்கள் வெளியிட்ட செய்தி (இது இன்னும் ஓரிரு நூட்களிலும் வருகின்றது) ஆதாரப்பூர்வமான செய்தியல்ல. கருத்து வேறுபாடுமிக்க பலவீனமான செய்தியாகும்.

இதில் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் என்பவர் இடம் பெற்றிருக்கின்றார், இவர் கடுமையான மனனக் குறையுள்ளவரும் இவர்பற்றி அஹ்மத் இப்ன் ஹன்பல் மற்றும் யஹ்யா இப்னு மஈன் (ரஹ்) அவர்களும் இவரை பலவீனர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள், இன்னும் தாவூத் இப்னு அலி என்பவரும் இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுகின்றார் அவரை இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் இவருடைய ஹதீதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனக்கூறுகின்றார்கள்.

யூதர்களுக்கு மாறு செய்வதென்றால் 9ம் பிறையில் நோன்பு வைப்பது போதும் என்று ஷாபிஈ உட்பட பலர் கூறுகிறார்கள்.

وروي عن ابن عباس أنه قال : صوموا التاسع والعاشر وخالفوا اليهود ، وإليه ذهب الشافعي وبعضهم إلى أن المستحب صوم التاسع فقط

எனவே பிறை 11ல் நோன்பு வைப்பது சுன்னதல்ல என்பதை எடுத்துரைக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

குர்ஆனும் - குர்ஆனுக்கு விளக்க உரையாக உள்ள ஹதீஸ்களும் மட்டுமே இஸ்லாம் என்ற நிலைக்கு உலமாக்கள் வந்தால் நாம் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் (அல்லாஹ் நாட்வேண்டும்)


அல்லாஹ்வின் முகத்திற்கு வருட பாத்திஹா 1

ஊர் நண்பன் | 6:54 PM |

அல்லாஹ்வின் முகத்திற்கு வருட பாத்திஹா


ஸலாம்.

அல்லாஹ் அப்பழுக்கற்றவன், தூய்மையானவன், அவனுக்கு நிகரானவர் - நிகரானவை எவரும் - எதுவும் இல்லை என்ற இஸ்லாத்தின் தனித்துவமான ஏகத்துவத்தை பாழ்படுத்தி இறைவனின் ஏகபோக கோபத்திற்கு ஆளாகும் செயல்பாடுகள் நம் சமுதாய மக்களால் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

எள்ளளவும், எள்ளின் முனையளவும் கூட இறைவனின் தன்மைகளுக்கு, அவனது ஆற்றலுக்கு நிகரான போக்கு யாரிடமும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற இஸ்லாத்தின் உச்ச உபதேசம் முஸ்லிம்களில் பலரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

நமதூரில் சென்ற ஆண்டு மரணித்த ஒரு பெரியவருக்கு ஆண்டு ஃபாத்திஹா ஓதப்பட்டது. அதற்காக அழைப்பிதழ் அடித்து தேவையானவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. அந்த அழைப்பிதழை பாருங்கள்.





இந்த அழைப்பிதழில் அந்தப் பெரியவரை "வஜ்ஹுல்லாஹ்" (அல்லாஹ்வின் முகம்) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இது எவ்வளவு அபாயகரமான வார்த்தை!

ஒரு மனிதர் அல்லாஹ்வின் முகத்திற்கு ஒப்பாவாரா? என்றுக் கூட சிந்திக்கத் தெரியாத அளவிற்கு இவர்களிடம் இஸ்லாமியப் பற்று இருக்கின்றது என்பதை எண்ணி வேதனைப் பட வேண்டியுள்ளது. தனிமனித வழிபாட்டில் இறைத் தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ
அவனைப் போன்று எதுவும் இல்லை (அல் குர்ஆன் 42:11)

அவனைப் போன்று எதுவும் இல்லை என்ற கோட்பாட்டுக்கு எதிராக "இதோ என் முகம் இருக்கின்றது" என்று யாரையாவது குறிப்பிட்டால் இது நிராகரிப்பின் வெளிபாடு கிடையாதா..!

"அல்லாஹ்வின் முகம்" என்றால் அது நேரடியான அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. ஓர் உவமையாக சொல்லப்பட்டது என்று யாராவது சப்பைக் கட்டு கட்டினால் கீழுள்ள குர்ஆன் வசனத்தை அவர்கள் விளங்கி ஈமான் கொள்ளட்டும்.

فَلاَ تَضْرِبُواْ لِلّهِ الأَمْثَالَ إِنَّ اللّهَ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ
அல்லாஹ்வை எதற்கும் உவமையாக்காதீர்கள். அல்லாஹ் நன்கறிபவன், நீங்கள் அறிய மாட்டீர்கள் ( அல் குர்ஆன் 16:74 )


அல்லாஹ்விற்கு உதாரணம் கூறக் கூடாது அவனுக்கு உவமையாக்கக் கூடாது என்ற இஸ்லாமிய இறைக் கோட்பாடு எத்தகைய உவமையையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை விளங்கட்டும்.

கிறித்தவத்தில் ஒரு மனிதர் மட்டுமே இறைத் தன்மைப் பொருந்தியவராக நம்பப்படுகிறார். அந்த நம்பிக்கையே ஒட்டு மொத்த கிறித்தவர்களையும் காஃபிர்கள் என்ற நிராகரிப்பவர்களாக்கி விட்டது.

ஆனால் முஸ்லிம்களில் சிலர், ஹிந்துக் கொள்கையைப் போன்று பலரை இறைத் தன்மைப் பொருந்தியவர்களாக இஸ்லாமிய தெளிவில்லாதவர்கள் ஆக்குகிறார்கள் என்றால் இவர்களின் நிலை என்ன?

இந்தக் கெடுதிகளுக்கு எதிராக நமதூர் ஜமாஅத்துல் உலமாக்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை 3

ஊர் நண்பன் | 9:50 PM |

பரங்கிப்பேட்டையில் நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பாக "கோடைக்கால தீனியாத்" வகுப்புகள் நடத்தப்பட்டு பயிற்சிப்பெற்றப் பிள்ளைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியு்ம், மார்க்க உரைகளும் நடைப்பெற்றது. (3-05-2011)

ஆரம்ப முதல் இறுதி வரை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் அஸர் முதல் மஃரிபு வரை கலந்துக் கொண்டோம்.

சிறு குழந்தைகள் மேடையில் அஸ்மாவுல் ஹுஸ்னா (இறைப் பெயர்கள்) அர்த்தத்துடன் சொன்ன விதமும். அதன்பிறகு ஒரு பெண் குழந்தை கிராஅத் ஓதிய விதமும் பாராட்டத்தக்க விதத்தில் அமைந்திருந்தது. குழந்தை ஓதிய கிராஅத்தின் உச்சரிப்புகள் மிக நேர்த்தியாக இருந்தன. இந்தப் பணிக்காக முயன்றுக் கொண்டிருக்கும் பயிற்சியாளர்களுக்கு அல்லாஹ் அருள்புரியட்டும்.

வழக்கமான மேடை, சிறு உரைகள் நடந்தன. சொல்லும் படியாக ஒன்றும் இல்லை. பிறகு அமீரக வருகையாளர் என்ற அறிமுகத்துடன் நண்பர் கவுஸ்மெய்தின் உரைத் துவங்கியது.







மிக சிறந்த உரை. பல்கலை கழகத்தில் ஆய்வுக் கட்டுரை சமர்பிப்பது போன்று அழுத்தமாக பேசினார். அவரது உரையில் சில மாற்றுக் கருத்து நமக்கிருந்தாலும் உரையில் தரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவரது உரை யாருக்கு புரிந்திருக்கும் என்பது பெரிய கேள்விக்குறி.

கூட்டத்திற்கு வந்திருந்த பத்துக்கும் குறைவான ஆண்களில் சிலரிடம் அவர் உரைக் குறித்து கேட்டோம். புரியவில்லை என்ற பதிலே கிடைத்தது. ஆண்களில் நிலையே இதுவென்றால் பெண்களை கேட்கவே வேண்டாம் என்று தோன்றியது.

வந்திருப்பவர்களை கருத்தில் கொண்டே உரை நிகழ்த்தப்பட வேண்டும் அப்போதுதான் நமது செய்திகள் - கருத்துக்கள் - தகவல்கள் அவர்களை சென்றடையும். நண்பரின் உரை, ஆய்வு மனப்பான்மையில் உழைத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மத்தியில் நிகழ்த்தப்பட்டிருந்தால் அவ்வளவு மெளனமாக அவர்கள் உரையை உள்வாங்கி இருப்பார்கள். இப்போது நடத்தப்பட்ட இடத்தை பொருத்து உரை சத்தற்று போயிற்று.

இருப்பினும் நமக்கும் மேடையிலிருந்த சிலருக்கும் உரை மிக பயனுள்ளதாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நகர ஜமாஅத்துல் உலமா பேரவைத் தலைவர் இதுபோன்ற உரைகளை அடிக்கடி கேட்டால் இன்ஷா அல்லாஹ் தெளிவு பெறுவார். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் இதற்கு முயற்சிக்க வேண்டும். இதை நாம் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் உள்ளது.


அவர் பேசும் போது அறியாமையால் நபி(ஸல்) அவர்களின் பெயரை பயன்படுத்தி ஒரு செய்தியை குறிப்பிட்டார் "மதரஸாவிற்கு வந்து குழந்தைகள் அலிப் என்ற ஒரு எழுத்தைக் கற்றுக் கொள்வதன் மூலம் அந்தக் குழந்தையின் பெற்றோரை அல்லாஹ் மன்னிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்" என்று பேசினார். இப்படி ஒரு அறிவிப்பு ஆதாரப்பூர்வமான எந்த நூலிலும் நம்மால் பார்க்க முடியவில்லை.


அவர் போன்றவர்களால் கிதாப்களை நேரடியாக பார்த்து ஆய்வு செய்ய முடியாவிட்டாலும் தரமான மார்க்க உரைகளை கேட்பதன் வாயிலாக அறிவைப் பெற முடியும் என்பதால் இதைக் கூறுகிறோம்.

மார்க்கத்தில் இஃமாஉ ஒன்றிருப்பதாக நண்பர் கவுஸ்மெய்தின் குறிப்பிட்டார். "ஏகோபித்த முடிவெடுத்து (இதற்கு பெயர் தான் இஜ்மாஉ) அல்லாஹ்வுக்கு நாம் தீனை கற்றுக் கொடுக்க முடியுமா? இது அல்லாஹ்வின் மார்க்கமல்லவா? அல்லாஹ் சொல்லாத எந்த விஷயத்தில் இஜ்மாஉ எடுக்கப்பட்டது என்று விளக்கினால் நலம்.

முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் இஜ்மாவிற்கு என்ன வேலை.

மார்க்க தெளிவுக்காக நடத்தப்படும் கூட்டங்களில் மார்க்க தெளிவு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துக் கொண்டால் அனைவருக்கும் நன்மை பயக்கும்.

கல்வி கருத்தரங்கம் பகுதி - 2 0

ஊர் நண்பன் | 10:51 PM | , , , , , , ,

ஸலாம்.

"கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்" ஷாதி மஹாலில் நடைப் பெற்றது. அதன் முதல் வீடியோ பகுதியை முன்பு வெளியிட்டோம். இது இரண்டாம் பகுதி.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சகோதரர் மாலிமார் உரையைத் தொடர்ந்து சமூகநீதி அறக்கட்டளை நிறுவனர் சகோதரர் CMN சலீம் உரைத் துவங்குகின்றது. மீதி அடுத்தப்பகுதியில்.

சமுதாய நலக் கூடத்தின் கல்வி கருத்தரங்கம் 0

ஊர் நண்பன் | 4:36 AM | , , , ,

ஸலாம் அப்பாபள்ளி சமுதாய நலக்கூட சார்பாக நடத்தப்பட்ட "கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்" நிகழ்ச்சியின் முதல் வீடியோ தொகுப்பு. ஊர் தலைவர் - ஜமாஅத் தலைவர் யூனுஸ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மாலிமார் ஆகியோரரின் உரை இடம் பெற்றுள்ளது. CMN சலீமின் உரை அடுத்து இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்.

இந்த வருட மீலாது (2011) 2

ஊர் நண்பன் | 12:10 AM |

ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார் . ஒவ்வொரு பொருமே அவருக்கு அல்லாஹ்வாகத்தான் தென்படும் . முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு ஞானிக்கு பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள்,விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும். இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் – அல்லாஹ் என்றே அழைத்தார்கள் . அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை ,பொற் சிலை , வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் – அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள் . ( புஸூஸூல் ஹிகம் – இப்னு அரபி ப:192 )




வெவ்வேறு படிமங்களுக்கு என் இதயம் திறந்தே கிடக்கிறது.
இது கிறித்துவ சந்நியாசிகளின் துறவுமடம்;
சிலைகள் கொலுவிருக்கும் கோயில்;
அரபு நாட்டு மான்களின் மேய்ச்சல் வெளி;
ஹஜ் பயணிகளுக்கு இது கஃபாப் பள்ளி;
தவ்ராத்தின் வரைபலகையும் இதுவே;
குர் ஆன் வேதமும் இதுவே;
நான் அன்பு எனும் மதத்தையே அனுஷ்டிக்கிறேன்.
அதன் பயணம் எத்திசையை நோக்கி அடியெடுத்தாலும் சரியே.
அன்பு எனும் மதமே என்னுடையது;
அதுவே என் நம்பிக்கை.
அவன் என்னுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்தி
அவனுடைய சாயலில் என்னைப் படைத்து
என்னைப் புகழ்கிறான்.

நான் அவனுடைய பரிபூரணத்தை எடுத்தியம்பி
அவனுக்குக் கீழ்ப்படிந்து
அவனைப் புகழ்கிறேன்.

அவன் எப்படி என்னிலிருந்து விடுபட்டு
சுதந்திரமாக இருக்க முடியும்?

இதற்காகவேதான் நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.
நான் அவனை அறிகிறேன்;
அவனுடைய உள்ளமையைக் கொணர்கிறேன்.

எல்லாப் பொருட்களும் இறைவனின் குடும்பத்தைச் சார்ந்தவையே
மனிதர்கள் உருவ வழிபாடு-தெய்வீக நிந்தனையால்
ஒருவரையொருவர் பழித்துக் கொள்கின்றனர்
காரணம், அவர்கள் வெளித்தோற்றத்தோடு நின்று விடுகின்றனர்
அவர்கள் தங்களிடம் குறைபாடுடைய
கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர்
ஆனால், இறைவனுக்கு எல்லா வடிவமும் உண்டு;
மேலும் அவனுக்கு எந்த வடிவமும் இல்லை
அவன் வடிவத்துக்கு அப்பாற்பட்ட யதார்த்தம்
மனிதர்கள் மாறுபட்ட கடவுள் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டனர்
ஆனால், நானோ ஒரே நேரத்தில்
எல்லாவகையான கடவுள் கொள்கைகளையும் கொண்டிருக்கிறேன். .....................................................
பிப்ரவரி 26 - 2011 சனிக்கிழமை பரங்கிப்பேட்டை ஷாதிமஹாலில் "சீரத்துன்நபி மீலாது மாநாடு" நடந்தது. மீலாது கமிட்டி இதை நடத்தியது.
வந்திருந்த பேச்சாளர்கள் யாரும் "நாங்கள் குர்ஆன் ஹதீஸோடு நெருக்கமான தொடர்புடையவர்கள் கிடையாது" என்பதை நிரூபித்தே தனது பேச்சை துவங்கி முடித்தார்கள். தமிழ் புலவர்களின் "பா"க்களும் கவிதைகளும் நிறைந்தன.
நபியின் புனித உடலை சுமந்துள்ள மண் அர்ஷைவிட சிறந்தது என்று நாகூசாமல் நஞ்சோடு பேசினார்கள்.
மீரான் என்ற பேச்சாளர் - ஆன்மீக வாழ்க்கை என்ற பெயரில் "துறவரத்தை ஊக்குவித்து? அவ்லியாக்களெல்லாம் துறவரம் பூண்டவர்கள் என்றெல்லாம் அளந்தார். இப்னு அரபி தனது தவ வலிமையால் இரண்டாம் வானம் சென்றுள்ளார்கள் என்றெல்லாம் ஜாஹிலியத்தை விதைத்து விட்டு சென்றார்.
அவ்லியாக்களின் பொருட்டால் தான் அல்லாஹ் இந்த ஊரை சிறப்பாக்கி வைத்துள்ளான் என்று ஆவூர் அப்துஷ் ஷகூர் அவர்கள் கதை பாடினார்.
குர்ஆன் ஹதீஸ் ஆங்காங்கே சில எடுத்துக் காட்டப்பட்டன. அவ்வளவுதான் இதுதான் மீலாது மாநாடு.
இப்னு அரபி என்ற வழிகெட்ட சூபிக் கொள்கைக்காரரின் கொள்கையை ஆரம்பத்தில் சுட்டிக் காட்டியுள்ளோம்.

கிழட்டு ஷெய்த்தான். 0

ஊர் நண்பன் | 7:15 PM |

ஸலாம்.



அவ்லியா பக்தி மீண்டும் பரங்கிப்பேட்டையில் சிறு அளவில் தலைதூக்க துவங்கியுள்ள நிலையில் ஷிர்க்கின் முதுகெலும்பை உடைக்கும் பணியில் நாமும் ஓயாமல் ஈடுபடுவோம் இன்ஷா அல்லாஹ்.



தர்காகளற்ற, கொடிமரங்கள் - உண்டியல்களற்ற, பள்ளிவாசல்களில் பக்கமே அனைத்து முஸ்லிம்களின் கவனமும் திரும்பக் கூடிய ஒரு சமுதாயம் உருவாக வேண்டும். அது நமதூராக இருப்பதற்கு நாம் ஆசைக் கொள்ள வேண்டும். உழைக்க வேண்டும்.



இந்த தர்கா மோகம் உட்பட பாத்தியாக்கள் அனைத்தும் ஷியாக்களிடம் இருந்து வந்தது என்பதை நாம் அழுத்தமாக கூறிவருகிறோம். நம்ப மறுப்பவர்கள் இந்த வீடியோவை பார்க்கட்டும்.

ஒரு கிழட்டு ஷெய்த்தான் அலி(ரலி) அவர்களின் பெயரை பயன்படுத்தி இசை போதையில் மக்களை ஆடவைத்து ஆயிரக்கணக்கில் பணத்தை சுருட்டுவதைப் பாருங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அறிவை - சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்துள்ளான்.

...



நரகில் தள்ளும் 4444........... 0

ஊர் நண்பன் | 6:49 PM |

சாபக்கேடான சலாததுன்னாரிய்யா

(பரங்கிப்பேட்டையில் ஒரு சிலரால் "புனிதமாக" கருதப்பட்டு ஓதப்படும் ஸலவாத்துதான் ஸலாத்துன்னாரிய்யா என்பதாகும். கடுகளவும் இஸ்லாமிய அங்கீகாரமற்ற இது போன்ற ஸலவாத்துகளால் கிடைக்கப் போகும் பரிசென்னவோ நகரம் தான். (அல்லாஹ் நரகை விட்டு நம்மை பாதுகாக்க வேண்டும்) இந்தக் கட்டுரையை பிரிண்ட் செய்து கொடுப்பதன் மூலம் அதை புனிதம் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு தெளிவு கிடைக்கலாம் இன்ஷா அல்லாஹ்)

தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது. இந்த ஸலவாத்தின் வாசகங்கள் பெரிதாக உள்ளதால் இதை அனைவரும் மனனம் செய்திருப்பதில்லை. மேலும் 4444 தடவை ஒருவர் இதை ஓதினால் இதற்காகப் பல நாட்களை ஒதுக்க வேண்டிவரும். இதனால் ஆலிம்களை அழைத்து அவர்களுக்கு உரிய(?) கட்டணம் கொடுத்து ஓதச் செய்யப்படுகிறது.

இது மார்க்கத்தில் உள்ளதா என்பதை நாம் அறிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். தவறான கருத்துக்களை உள்ளடக்கியது

ஸலவாதுன்னாரியா எனப்படும் இந்த ஸலவாத் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வந்த சில அறிவீனர்களால் உண்டாக்கப்பட்டதால் இதில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கும் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.

இந்த ஸலவாத்துக்குப் பெயர் வைத்தவர்கள் அதில் மட்டும் உண்மையாளர்களாக உள்ளனர். நார் என்றால் நெருப்பு, நரகம் என்று பொருள். ஸலவாதுன்னாரிய்யா என்றால் நரகில் சேர்க்கும் ஸலவாத் என்பது பொருள். இதை ஓதுவதால் நரகம் தான் கிடைக்கும் என்று பொருத்தமாகப் பெயர் வைத்துள்ளனர்.

اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك

அல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன், வஸல்லிம் ஸலாமன் தாம்மன், அலா ஸய்யிதினா முஹம்மதின், அல்லதீ தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப். வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு. வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபீ குல்லி லம்ஹத்தின் வ நஃபசின் பி அததி குல்லி மஃலூமின் லக்க

இது தான் ஸலவாத்துன்னாரியா என்பது. இதன் பொருள் :

பொருள்: அல்லாஹ்வே! எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக! அந்த முஹம்மத் எப்படிப்பட்டவரென்றால் அவர் மூலமாகத் தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர் மூலம் தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர் மூலம் தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அவருடைய திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது.

துன்பங்களை நீக்குபவன் யார்?

மேற்கண்ட நரகத்து ஸலவாத்தில், நபி(ஸல்) அவர்கள் மூலம் தான் சிக்கல் அவிழ்கிறது என்றும், துன்பம் நீங்குகிறது என்றும், தேவை நிறைவேறுகிறது என்றும் கூறப்படுகிறது. உண்மையில் சிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்றை நீக்குவதும், தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய ஆற்றலாகும். இறந்தவர்களுக்கோ அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாகக் கூறுவது நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய இணை கற்பிக்கின்ற காரியமாகும்.

அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனைத் தவிர இந்த ஆற்றல் வேறு யாருக்கும் அணுவின் முனையளவு கூட கிடையாது.

ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான்.அல்குர்ஆன் 6:64

நபி(ஸல்) அவர்களாக இருந்தாலும் தமக்கோ, மற்றவர்களுக்கோ எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

'அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்குர்ஆன் 7:188

'நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்' என (முஹம்மதே!) கூறுவீராக! 'நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்' என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 72:20, 21, 22


அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் 10:107

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களால் துன்பங்களை, சிக்கல்களை நீக்க முடியும் என்று நம்பிய தீயவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வியைப் பாருங்கள்

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து, துன்பத்தைப் போக்கி, உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! அல்குர்ஆன் 27:62

நபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ற இந்த நரகத்து ஸலவாத்தை நாம் ஓதலாமா?

நாட்டங்களை நிறைவேற்றுபவன் யார்?

மேற்கண்ட நரகத்து ஸலவாத்தில் நபியவர்கள் மூலம் தான் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.

நபி (ஸல்) அவர்களின் எத்தனையோ நாட்டங்கள் நிறைவேறாமல் போயிருக்கின்றன. நாட்டங்களை நிறைவேற்றக் கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்குமானால் அவர்கள் முதலில் தம்முடைய நாட்டங்களை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், முனாஃபிக்குகளின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் என்பவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அது நிறைவேறாதது மட்டுமல்லாமல் அல்லாஹ், அதை மன்னிக்கவே மாட்டேன் என்று திருமறை வசனத்தையும் அருளினான்.

(முஹம்மதே!) அவர்களுக்காக பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல் குர்ஆன் 9:80

நபியவர்கள் தம்முடைய சிறிய தந்தையாகிய அபூ தாலிப், ஏகத்துவக் கொள்கையை ஏற்க வேண்டும் என விரும்பினார்கள். அவர்களுடைய மரணத் தருவாயில் அவர்களிடம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கூறுமாறு மன்றாடினார்கள். அவர்கள் கலிமாவை மொழியாமல் மரணித்த பிறகும் அல்லாஹ் தடுக்கின்ற வரை பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றார்கள்.

ஆனால் அவர்களின் இந்த மாபெரும் நாட்டத்தை இறைவன் நிறைவேற்றவில்லை. மாறாக, நபிக்கு நாடியதைச் செய்யும் ஆற்றல் கிடையாது என்பதை இது தொடர்பாக இறங்கிய வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன். அல்குர்ஆன் 28:56

மேலும் நபியவர்கள் மக்காவில் வாழ்ந்த அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற அனைத்து காஃபிர்களும் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தார்கள். இதனைப் பின்வரும் வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும். அல்குர்ஆன் 26:3

நபியவர்கள் தம்மை அழித்துக் கொள்ளும் அளவிற்கு ஒன்றை விரும்பியும் அந்த நாட்டம் நிறைவேறவில்லை. நாட்டங்களை நிறைவேற்றக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். நபியவர்கள் மூலம் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று இந்த ஸலவாத்தில் வரக்கூடிய வரிகள் நிரந்தர நரகத்தைத் தரக் கூடிய வரிகளே என்பது தெளிவாகிறது.

அழகிய இறுதி முடிவை தருபவன் யார்?

நபியவர்கள் மூலம் தான் அழகிய இறுதி முடிவு நமக்குக் கிடைக்கிறது என ஸலாத்துந் நாரியாவில் வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.

ஒருவன் மரணிக்கும் போது சுவர்க்கவாசியாக மரணிப்பதும் நரகவாசியாக மரணிப்பதும் இறைவனின் நாட்டமே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 5175

மேலும் நபியவர்கள் மூலம் அழகிய முடிவு ஏற்படுகிறதென்றால் அவர்கள் விரும்பிய அபூ தாலிப், அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற இன்னும் பலர் முஸ்லிம்களாக மரணித்திருக்க வேண்டும். அவர்கள் ஏன் காஃபிர்களாக மரணித்தார்கள்? இதைச் சிந்தித்தாலே மேற்கண்ட வரிகளை ஓதினால் நாம் நிரந்தர நரகத்தைத் தான் சென்றடைவோம் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மழை பொழிவிப்பவன் யார்?

ஸலவாத்துன்னாரிய்யா எனும் நரகத்து ஸலவாத்தில் நபியவர்களின் திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது என்று வருகிறது. இந்த வரிகளும் இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற வரிகளாகும்.

மழையைப் பொழிவிக்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா? அல்குர்ஆன் 56:68, 69, 70

அவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.
அல் குர்ஆன் 42:28


அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர். தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை சுவைக்கச் செய்யும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அல்குர்ஆன் 30:48

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய முடியாது. நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி வைக்கின்றான். இன்னும், அவன் கர்ப்பங்கல் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப் போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ் தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன். (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) நூல்: புகாரி 4777

மேற்கண்ட இறை வசனங்களும், ஹதீஸ்களும் மழையைப் பொழியச் செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனவே நபியவர்களின் திருமுகத்தின் மூலமே மழை பொழிகிறது என்று நரகத்து ஸலவாத்தில் வரக்கூடிய இந்த வாசகங்களை நாம் ஓதினால் நாம் செல்லுமிடம் நரகம் தான்.

'கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 3445

அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான். அது தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! அல்குர்ஆன் 33:56

இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி(ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்' என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல்: புகாரி 4797

'எங்கள் தொழுகையில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் சொல்வது?' என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நபி(ஸல்) அவர்கள் இந்த ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்ததாக முஸ்னத் அஹ்மதில் ஹதீஸ் (16455) இடம் பெற்றுள்ளது.

தொழுகை அல்லாத சமயங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. (பார்க்க: நஸயீ 2728)

'யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 577

'முஅத்தினின் பாங்கை நீங்கள் செவியுறும் போது, அவர் சொல்வது போன்றே நீங்களும் சொல்லுங்கள். பிறகு நீங்கள் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் நிச்சயமாக என் மீது யார் ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை அருள் செய்கின்றான். பிறகு எனக்காக வஸீலாவைக் கேளுங்கள். நிச்சயமாக அது சுவனத்தில் உள்ள தகுதியாகும் (அல்லது வீடாகும்). அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே தவிர வேறு யாருக்கும் அது கிடைக்காது. (அதை அடையும்) அடியாராக நான் ஆக வேண்டும் என்று ஆதரவு வைக்கின்றேன். யார் எனக்காக அந்த வஸீலா வேண்டி பிரார்த்திக்கின்றாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை ஏற்பட்டு விட்டது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்(ரலி) நூல்: முஸ்லிம்

பாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் கூறி, அதன் இறுதியில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும், அவர்களுக்காக வஸீலா வேண்டிப் பிரார்த்தனையும் செய்பவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் உறுதியாகி விட்டது என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

நபி(ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலவாத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் ஸலாத்துந்நாரிய்யாவை இனியும் ஓதலாமா?

ஒரு தொண்டன் தனது தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தனது தலைவருக்கு தனது அன்பின் பரிமாணம் தெரிய வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்கிறோம். உடல் உறுப்புக்களைச் சேதப்படுத்துதல், தன்னையே அழித்துக் கொள்ளுதல் போன்ற ஆபத்தான அழிவுப் பாதையை இதற்காகத் தேர்ந்தெடுக்கின்றான். இஸ்லாம் இந்த உளவியல் ரீதியான பிரச்சனையை உரிய வகையில் கையாள்கின்றது.

'உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே!' என்று நபித்தோழர்கள் கேட்ட போது, 'நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் நூல்: அபூதாவூத் 883

'நிச்சயமாகப் பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: நஸயீ 1265

அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலாத்துந் நாரிய்யாவை விட்டு விட்டு, அவனது அருளை அள்ளித் தரும் ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.

குறிப்பு: நமது ஸலவாத், ஸலாம் நபி(ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது.

நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பள்ளி நிர்வாகம் இடமளிக்கக் கூடாது. 0

ஊர் நண்பன் | 8:06 PM | , , ,

ஸலாம்

மீராபள்ளி அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ள "நாகூர் சுன்னத் ஜமாத் முரீது" வியாபாரிகளின் விளம்பர நோட்டிஸ். பள்ளி நிர்வாகம் இது போன்ற நோட்டிஸ்களுக்கு இடமளி்க்கக் கூடாது.



ஸலவாத்தையும் வியாபாரமாக்கி வசூல் வேட்டை நடத்தும் இது போன்ற காரியங்களுக்கு எந்த முஸ்லிமும் ஆதரவளிக்கக் கூடாது. ஸலவாத்தோ - திக்ரோ எதையும் லட்சோப லட்ச முறை ஓதும் எந்த கட்டளையும் இஸ்லாத்தில் இல்லை.

ஒரு வித மயக்கத்தையும், போதையையும் ஏற்படுத்தக் கையாளப்படும் தந்திரம் தான் இது. புறக்கணிப்போம். புறக்கணிக்கத் தூண்டுவோம்.

ஹி 1431 அரஃபா தினம் 15/11ம் தேதி திங்கள் கிழமை 0

ஊர் நண்பன் | 1:33 AM | ,

ஸலாம்

1431 ஹிஜ்ரி ஆண்டின் அரபா தினம் 5ம் தேதி திங்கள்கிழமை நவம்பர் - 2010ல் வருகின்றது. இது சந்திர விஞ்ஞான அடிப்படையிலான தெளிவாகும். சவுதி அரேபியாவும் வரும் திங்கள்கிழமை அரபா என்று அறிவித்துள்ளது.

ஹாஜிகள் அரபாவில் அணிதிரளும் அன்று அரபா தினத்தில் இல்லாதவர்கள் நோன்பு வைப்பது சுன்னத்தாகும்.

அரபா தினம் குறித்து மாறுபட்ட கருத்துள்ளதால் அதை தெளிவுபடுத்த இந்த கட்டுரை.

صيام يوم ‏ ‏عرفة ‏ ‏أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده

அரஃபாதின நோன்பு என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதால் அரஃபா தினம் எதுவென்று அறிந்து நோன்பு வைப்பதே சுன்னத்தாகும்.

இது குறித்து இன்னும் விரிவான விளக்கமறிய கீழுள்ள லிங்கிற்கு செல்லவும்

அரபாதினம் முரண்பாடுகளை களைவோம்

குர்ஆன் கிராஅத் போட்டி வீடியோ 1

ஊர் நண்பன் | 8:30 PM | , , , , ,

அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும்.


ஜுன் 12,13-2010 சனி ஞாயிறுக் கிழமைகளில் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மீராப்பள்ளியில் தென்னந்திய அளவிளான முதலாவது கிராஅத் போட்டி நடைப் பெற்றது. வெளியூரிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் போட்டியில் பங்குபெற ஏராளமான மாணவர்கள் வந்திருந்தனர்.


இரண்டாம் நாள் கிராஅத் போட்டி வெகு சிறப்பாக இருந்தது. மீராப்பள்ளி நிர்வாகம் ஊர் முழுவதும் ஹாரன் கட்டி கிராஅத்தை ஒலிபரப்பினர். காரிகளின் மிக அற்புதமான குரல்வளத்துடன் ஒலித்த குர்ஆன், கேட்போர் மனதைக் கவர்ந்திழுத்தது.


கிராஅத் போட்டியிலிருந்து ஒரு சிறு வீடியோ தொகுப்பு. (முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க முடியவில்லை)

காவல் நிலையம் எங்களுக்குப் பெருமை! 0

ஊர் நண்பன் | 6:39 PM | , , , , , ,

பொதுவாகவே பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் இடையே நிரப்ப முடியாத ஒரு இடைவெளி நீடிப்பதை அனைவரும் அறிவர்.

காவல் துறைப் பற்றிய பய உணர்ச்சியே மக்களை காவல் துறை வட்டாரத்திலிருந்து விலக்கி வைத்துள்ளது. குற்றவாளிகளும், காவல் துறையும் மட்டுமே உறவாட தகுதியானவர்கள், பிற எவரும் காவல் துறையோடு உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அது பாவம் என்ற மனப்பான்மைக் கூட மக்களில் பலரிடம் இருக்கத்தான் செய்கின்றது.

உண்மையில் சில பொழுதில் - சில இடங்களில் காவல் துறையின் போக்கும் மக்களிடம் இத்தகைய மனப்பான்மை வளர்வதற்கு காரணமாக இருந்துள்ளன.

மற்ற இடங்கள் எப்படியோ நமக்குத் தெரியாது. நமதூர் பரங்கிப்பேட்டை காவல் நிலையம் பற்றி நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆய்வாளர் புகழேந்தி பரங்கிப்பேட்டையில் பொறுப்பேற்றவுடன் சில மாற்றங்கள் நடந்துள்ளன. நடந்தும் வருகின்றன. எளிமையாக எவரும் பொதுத் தேவைகளுக்கு காவல் துறையை அணுகலாம் என்ற வெளிப்படையான மனநிலை இன்று உருவாகி வருகின்றது.

காவல் நிலையத்தின் உள்ளே எழுதப்பட்டுள்ள சுவர் வாசகங்களை உலகிற்கு நாம் காட்டுவோம். "மனித உறவு மேம்பட.." என்ற முத்தான தலைப்புடன் வரையப்பட்டுள்ள வாசகங்கள் காவல் துறைப் பற்றிய மதிப்பை இன்னும் ஆழமாக்குகின்றது.









பயமற்ற மரியாதையான உறவு காவல் துறையுடன் பொது மக்களுக்கு ஏற்பட வேண்டும். குறிப்பாக தீயவர்கள் காவல் துறையுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவை விட நல்லவர்கள் அவர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் நேசத்தாலும், சகோதரத்துவத்தாலும் ஊரில் தீமைகள் குறையவும், காவலர்களின் பணி இன்னும் சீராகவும் வாய்ப்பு ஏற்படும்.

எங்கள் ஊர் காவல் நிலையம் எங்களுக்குப் பெருமை!

பாக்ஸிங் சாம்பியனுடன் நேர்காணல் 2

ஊர் நண்பன் | 6:28 PM | , , , , ,








மென்மேலும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

தப்லீக் இஜ்திமா.. 10 ஆயிரம் பேர்களுடன் 1

ஊர் நண்பன் | 6:36 PM | , , ,

ஸலாம்

10 ஆயிரம் பேர் எதிர்பார்க்கப்படும் தப்லீக் இஜ்திமா பரங்கிப்பேட்டை S.S நகரில். அதற்கான ஆயத்தப் பணிகள்.





இஸ்லாமியக் கொள்கை விளக்கக் கூட்டம் 0

ஊர் நண்பன் | 6:20 PM | , , ,



ஸலாம்

இஸ்லாமிய தஃவா கமிட்டி அறிமுகக் கூட்டம் ஜாமிஆ அப்பாப்பள்ளியில் நடந்தது. "இஸ்லாமிய கொள்கை விளக்கம்" என்ற தலைப்பில் சகோதரர் அப்துல் காதர் மதனி, ஜி. நிஜாமுத்தீன் ஆகியோர் உரையாற்றினர்.

கொள்கை விளக்கக் கூட்டம் 0

ஊர் நண்பன் | 9:22 PM |

ஸலாம்
கொள்கை விளக்கக் கூட்ட நோட்டிஸ்

குர்ஆன் - கருவியல் - அறிவியல் 0

ஊர் நண்பன் | 7:30 PM | , , , , ,



ஒற்றை உயிரணு மனித சைகோட்டானது, சக்தி வாய்ந்த ஒரு செய்கையின் மூலம் நூறு ட்ரில்லியன் உயிரணுக்களைக் கொண்ட மனித உருவாக வடிவெடுப்பது இயற்கையில் நடக்கும் அற்புதங்களிலேயே குறிப்பிடத்தக்கதாகும். ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி அன்றாட நடவடிக்கைகளை செய்யும் வளர்ச்சியடைந்த மனித உடல் கருவிலேயே நிலைப்படுத்தப்படுகிறது - அதுவும் பிறப்பிற்கு வெகு காலத்திற்கு முன்னமே!



குர்ஆன் கருவியலைப் பற்றிப் பேசுகின்றது!



وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا



நிச்சயமாக (இறைவனாகிய) அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான் (அல்குர்ஆன்: 71:14)



கருவறை செல்லும் உயிரணு உடனடி குழந்தையாக மாறுகின்றது, இல்லை, இல்லை கருமுட்டைதான் குழந்தையாக மாறுகின்றது என்ற முந்தையகால விஞ்ஞான நம்பிக்கைகள் முற்றாகப் புறக்கணித்து கருவறையில் ஒரு நிலை மட்டும் என்ற நிலை எந்த சந்தர்ப்பத்திலும் இல்லை. கருவுருவாக்கம் என்பது பல நிலைகளை கொண்டதாகும் என்ற நவீன விஞ்ஞான உண்மையை அன்று முதலே உலகிற்கு அறிவித்து நிற்கிறது குர்ஆன்.



பல நிலை என்பதன் பொருள் என்ன? வியக்க வைக்கும் இன்றைய கருவறை விஞ்ஞானத்தை பல நிலை என்ற குத்து மதிப்பான வார்த்தையைப் போட்டு சொல்லி விட்டால் அது விஞ்ஞான அறிவிப்பாகுமா? என்று அறிவார்ந்த வாதம்(?) எவராவது புரிந்தால் இன்னும் ஆழமாக கருவுருவாக்கம் பற்றி அவரோடு பேசுகிறது குர்ஆன்.



கருவளர்ச்சி என்பது பல நிலைகளாக மாறி கடைசியாக வேறொரு படைப்பாக அது தீர்மானிக்கப்படுகின்றது.



பல நிலைகள் என்னென்ன? என்பதை வரிசைப்படுத்துகின்றது குர்ஆன்



وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ



நாம் மனிதனை களிமண்ணிலுள்ள சத்தினால் படைத்தோம்



ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ



பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத்துளியாக்கி வைத்தோம்.



வியக்க வைக்கும் குர்ஆன் அறிவியலை வீடியோ காட்சிகளுடன் தொடர்ந்துப் பார்ப்போம். இறைவன் நாடட்டும்

மீலாது - சீரத்துன்னபி மாநாடு 0

ஊர் நண்பன் | 12:03 AM | , , , ,


பரங்கிப்பேட்டையில் மீலாது சீரத்துன்னபி என்ற பெயரில் ஷாதி மஹாலில் மாநாடு நடைப் பெற்றது. பெண்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

தௌலத்துன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் எம்.அப்துல் காதிர் மரைக்காயர் உம்ரி வழக்கம் போல தனது ஆதங்கத்தை கொட்டினார். பல ஆண்டுகள் படித்த நாமே வாய்மூடிக் கொண்டிருக்கும் போது இன்றைக்கு சின்னப் பிள்ளைகளெல்லாம் மஸாயில் பேசுகிறார்கள் என்றார். (மார்க்கத்தை தெரிந்துக் கொள்ள ஆசைப்படும் இந்த மாற்றம் ஆரோக்யமான மாற்றம் தான் என்பது ஏனோ சிலருக்கு விளங்குவதேயில்லை)



தொடர்ந்து பேசியவர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை ஆங்காங்கே எடுத்துக் காட்டினர்.



நபிப்புகழ் என்ற பெயரில் "பஞ்சபூதங்களும் நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்டன..." என்ற தோரணையில் பேச்சைத் துவங்கி, "இந்தத் தூதர் உங்களுக்கு மத்தியில் இருக்கிறார்.. என்ற - வசனத்தை எடுத்துக்காட்டி - வாதத்தை வைத்து, மெளலீது ஓதக்கூடாது என்று சொல்பவர்கள் முட்டாள்கள் என்று பத்வா கொடுத்து பேச்சை முடித்தார். சாலிஹ் நபியின் ஒட்டகமும், குகைவாசிகளின் நாயும் சொர்க்கத்துக்குப் போகும் என்று குர்ஆனில்? இருக்கின்றது என்றார்.(குர்ஆனில் எந்த வசனத்தில் இது கூறப்பட்டுள்ளது என்று சுன்னத்வல்ஜமாஅத்தோ, விழாகமிட்டினரோ எடுத்துக்காட்டினால் நன்றாக இருக்கும்)



தொடர்ந்து பேசிய "ஆன்மீகத் தந்தை"யும் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையை ஓரளவு புதுப்பித்தார்.



குணங்குடி மஸ்தானின் கற்பனைப் புராணமெல்லாம் நபிப்புகழ் என்றப் பெயரில் பாடப்பட்டது. தாஹா மதனி என்ற பெயருடன் புராணம் பாடபட்டதால் அவரை அணுகி "மதனி" என்பது தங்களுக்கு வீட்டில் வைத்தப் பெயரா.. அல்லது மதினாவின் பட்டமா என்று கேட்டோம். தரிக்காவில் கொடுக்கப்பட்ட பட்டம் என்று ஒரு போடு போட்டார். (மதினாவில் படித்து பட்டம் வாங்கி மதனிகள் ஜாக்கிரதை)

பள்ளி முத்தவல்லிகள் சிந்தித்தால் நலம்! 0

ஊர் நண்பன் | 9:02 AM | , , , , ,

நபி (ஸல்) அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரில் சில பள்ளிவாசல்களில் மவ்லூதுகள் என்ற பெயரில் பல பாடல்கள் ஓதப்பட்டு வருகின்றன. ஆனால், இறைவனது திருப்தியைப்பெறும் நோக்கத்தில் ஓதப்படும் மவ்லூதுகளினால் இறைவனது கோபப்பார்வைதான் ஏற்படுகின்றது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا

”பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில்) அவனைவிடுத்து வேறுயாரையும் அழைக்காதீர்கள்” (அல்குர்-ஆன் 72:18)

என்ற அல்லாஹ்வுடைய கட்டளையை புறந்தள்ளும் விதமாகத்தான் நபியை அழைத்து பாடப்படும் மவ்லூது வரிகள் அமைந்துள்ளன.

நபி அவர்களை இறைவனுடைய நிலைக்கு உயர்த்தும் பாடல்வரிகளும் இதில் ஏராளமாக உள்ளன.

مَن يُشْرِكْ بِاللّهِ فَقَدْ حَرَّمَ اللّهُ عَلَيهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல் குர்ஆன்: 5:72)


எனவே இத்தகைய மாபாதக இணைவைக்கும் காரியத்தை விட்டு நாம் விலகவேண்டும்.

மேலும், இத்தகைய இணைவைப்பு காரியங்களை ஏகத்துவ மையமாக திகழ வேண்டிய பள்ளிவாசல்களில் ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள் இத்தகைய இணைகற்பிக்கும் மாபாதக செயல்களை உங்களது பொறுப்பில் பள்ளிவாசல்களில் செய்ய அனுமதியளிப்பீர்களேயானால் அல்லாஹ் இது குறித்து உங்களிடம் விசாரிப்பான்.

”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். ஒவ்வொருவரும் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்”. (ஆதாரம்: புகாரி: 893)

எனவே, இணைவைக்கும் பெரும்பாவத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும் மவ்லூது, மற்றும் இது போன்ற பாவங்களான தர்கா, தட்டு, தகடு, தாயத்து, போன்ற இணைவைப்பு செயல்களையும், மற்றும் நம்மை வழிகெடுக்கும் பித்அத்களையும் (மார்கத்தின் பெயரால் புதிதாக புகுத்தப்படும் அனாச்சாரங்களையும்) உங்களது பொறுப்பின் கீழ் இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் அனுமதிக்காமல் தடைசெய்யும் படி உரிமையுடன் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

இத்தகைய செயல்களை இனிமேலும் நீங்கள் அனுமதித்தால் உங்களது பொறுப்பின் கீழுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வழிகெடுத்த பாவத்தையும் நீங்கள் சேர்த்து சுமக்க நேரிடும் என்பதையும் உங்களுக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

மீலாது விழா ஒரு சதி - ஜி.என் 0

ஊர் நண்பன் | 8:44 AM | , , , , ,


ரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம். இது அருள் நிறைந்த மாதம். உலகத்தை ஒளிபெறச் செய்யும் மாதமுமாகும், ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடையாளமாகும் என்று எண்ணி மீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்(?) வெகு கோலாகலமாக பல முஸ்லிம்களின் வீடுகளிலும் பள்ளிகளிலும் நடைபெறும். இஸ்லாத்திற்கும் இச்செயலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது (வாஜிபாகும்) கட்டாயமாகும்.

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். யார் தன் பிள்ளை பெற்றோர் மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வில்லையோ அவர் உண்மையான முஃமினாக முடியாது.

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُواْ حَتَّى يَأْتِيَ اللّهُ بِأَمْرِهِ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ

(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 9:24)

தன் பெற்றோர், பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக தன் பெற்றோர் இன்னும் பிள்ளைகளைவிடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

(ஒருநாள்) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் கையை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களையும் விட உங்களை நான் மிகவும் நேசிக்கின்றேன் என உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக உன்னை விட நான் மிக நேசமுள்ளவராக ஆகும் வரை நீர் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இப்போது நீங்கள் என் உயிரை விடவும் என்னிடத்தில் மிக நேசமானவர்கள் எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இப்போதுதான் நீங்கள் உண்மையான முஃமீன் எனக்கூறினார்கள். ஆதாரம்: புகாரி

இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நபி(ஸல்) அவர்களை உண்மையான முறையில் நேசிப்பது வாஜிபாகும் (கட்டாயமாகும்).

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?நபி(ஸல்) அவர்களை நேசிப்பதென்பது அல்லாஹ்வும் இன்னும் அவனின் தூதர் நபி(ஸல்) அவர்களும் ஏவியவைகளை எடுத்தும் தடுத்தவைகளை தடுத்தும் நடப்பதுதான் உண்மையான நேசமாகும். இப்படித்தான் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வேண்டும்.
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்(நபியே!) நீர் கூறும், "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 3:31)

யார் என்னுடைய இயற்கை பண்புகளை நேசிக்கின்றாரோ அவர் என் வழியை பின்பற்றட்டும், திருமணமும் என் வழியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனன் ஸயீத் இப்னு மன்ஸுர், சுனனுல் குப்ரா லில் பைஹகி)

நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை எப்படி நேசித்தார்கள்?

கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை அடிதவறாமல் பின்பற்றினார்கள் என்று சொல்வதைவிட நபி(ஸல்) அவர்களின் அசைவுகளையும் பின்பற்றினார்கள் என்பதுதான் பொருத்தமாகும். அதைக் குறிப்பிடும் சில வரிகள்..
1. நீங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை எப்படி நேசிக்கக்கூடியவர்களாக இருந்தீர்கள்? என அலி(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்கள் எங்களின் பொருட்கள், பிள்ளைகள், தந்தை, தாய்மார்கள் மற்றும் தாகத்தின் போது குளிர் தண்ணீரை விடவும் எங்களிடம் மிகவும் நேசமுள்ளவர்களாக இருந்தார்கள் என விடை பகிர்ந்தார்கள்.
2. மக்கா முஷ்ரிக்கீன்களுக்கு அடிமையாக இருந்த ஜைத் இப்னு ததினா என்னும் நபித்தோழரை கொலை செய்வதற்காக மக்கா முஷ்ரிக்கீன்கள் ஹரத்தின் எல்லையை விட்டும் வெளியே எடுத்துச் சென்ற போது அபூ சுஃப்யான் இப்னு ஹர்பு(ரலி) அவர்கள் (அப்போது அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை) கேட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னை உன் குடும்பத்தோடு வாழ விட்டுவிட்டு உன் இடத்தில் முஹம்மதை வைத்து அவரின் கழுத்து துண்டாடப்படுவதை நீ விரும்புவாயா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் என் குடும்பத்தோடு இருந்து நபி(ஸல்) அவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே நோவினை தரும் ஒரு முள் குத்துவதைக்கூட நான் விரும்பமாட்டேன் எனக் கூறினார்கள். அப்போது அபூ சுஃப்யான் இப்னு ஹர்பு(ரலி) அவர்கள் முஹம்மதை அவரின் தோழர்கள் நேசிப்பது போன்று மனிதர்களில் யாரும் யாரையும் நேசிப்பதாக நான் பார்க்கவில்லை என்று கூறினார்கள்.
3. நபி(ஸல்) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி உஹது யுத்தத்தில் பரவிய போது நபித்தோழர்கள் திகைத்துப் போனார்கள். அப்போது ஒரு நபித்தோழி திகைத்துப் போன நிலையில் நபி(ஸல்) அவர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக உஹதுப் போர்களத்திற்கு வந்தபோது தன்னுடைய மகன், தந்தை, கணவன் இன்னும் சகோதரர் ஷஹீதாக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்படுகின்றார்கள். அவர்களில் யாரை முதலில் பார்த்தார்கள் என்பது எனக்குத் தெரியாது அந்த நபித்தோழி ஷஹீதாக்கப்பட்டவர்களை கடந்து செல்லும் போதெல்லாம் இவர் யார் என வினவிய போது இது உமது தந்தை, உமது சகோதரர், உமது கணவர், உமது மகன் என்று சொல்லப்பட்டது. அப்படி சொல்லப்படும் போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்கே? என்றுதான் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கொஞ்சம் முன்னால் நிற்கின்றார்கள் என நபித் தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்த அவர்கள் அன்னாரின் ஆடையின் ஓரத்தைப் பிடித்தவாறு, பின்பு கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் அற்பணமாகட்டும், நீங்கள் நலமடைந்து விட்டால் நான் எந்த அழிவைப்பற்றியும் கவலைப்படமாட்டேன் எனக்கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) ஆதாரம்: தப்ராணி

மற்றொரு அறிவிப்பில்: உங்களின் நலத்திற்குப் பின் எல்லா கஷ்டங்களும் மிக இலேசானதே என்றார்கள். (ஷீறா இப்னு ஹிஷாம்)

நபித்தோழர்களும் நபித்தோழிகளும் உண்மையாகவே நபியவர்களை நேசித்தார்கள் என்பதற்கு இது போன்ற எத்தனையோ வரலாற்றுக் குறிப்புகளை கூறலாம்.

நபி(ஸல்) அவர்கள் ஏவியதையும் தடுத்ததையும் நபித்தோழர்கள் எடுத்தும் தடுத்தும் நடந்தார்கள் என்பது மட்டுமல்லாமல், நபி(ஸல்) அவர்களுக்காக தன் உயிரையே அற்பணித்தார்கள். நபியவர்களின் விருப்பத்தை தன் விருப்பமாக்கினார்கள். இப்படித்தான் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் விட்டுவிட்டு, ரபீவுல் அவ்வல் மாதத்தில் நபியவர்கள் பேரில் மெளலிது படித்துவிட்டு அல்லது மீலாது விழா நடத்திவிட்டு நாம் நபி(ஸல்) அவர்களை புகழ்ந்து விட்டோம் என்பது போலி நேசமாகும். இன்னும் இவர்களில் அதிகமானவர்கள், நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திலிருந்து வெகு தூரமானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மெளலிது படிப்பதும் மீலாது விழா நடத்துவதும்நபி(ஸல்) அவர்களை நேசிப்பதாக இருந்திருந்தால் அதை நிச்சயமாக நபித்தோழர்கள் செய்திருப்பார்கள். ஆனால் நபித்தோழர்களோ, தாபியீன்களோ, தப்உத்தாபியீன்களோ, சிறப்பிற்குரிய எந்த இமாம்களோ இதைச் செய்யவில்லை. அதாவது சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டிலும் இது நடைபெறவில்லை,
இதை முதலில் அரங்கேற்றியவர்கள் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த பாதினிய்யா கூட்டத்தைச் சேர்ந்த ஃபாத்திமியின்கள் என்பவர்கள்தான். இஸ்லாத்தில் இல்லாதவைகளை இஸ்லாத்தில் நுழைய வைக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தார்கள்.

ஃபாத்திமியீன்கள் யார் என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமாகும். இவர்கள் பாதினிய்யா (பல தவறான கொள்கைகளை உள்ளடக்கியவர்கள் என்பது இவ்வார்த்தையின் பொருளாகும்) என்னும் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையை கொண்டுள்ள யூத பரம்பரையைச் சேர்ந்த அப்துல்லா இப்னு மைமூன் அல் கத்தாஹ் என்பவனின் வம்சாவழியாவார்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள். இஸ்லாமியப் போர்வையிலே இஸ்லாத்தை அழிக்க முற்பட்டவர்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்துவிட்டு இஸ்லாத்தில் இல்லாதவைகளை இஸ்லாமியப் பெயரில் இஸ்லாத்தினுள் நுழைத்தவர்கள்.
அலி(ரலி) அவர்களை இறைவனென்றும் அல்லது நபித்துவத்திற்கு தகுதியுள்ளவரென்றும் வாதிடக்கூடியவர்கள். நபித்தோழர்களை ஏசுபவர்கள். மறுமையை மறுப்பவர்கள், காபிர்கள், நெருப்பு வணங்கிகள். தவறான வம்சாவழியில் உள்ளவர்கள் என்ற பல குற்றச்சாட்டுகளை இவர்கள் மீது இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
இவர்களைப் பற்றி சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்கள் பின்வருமாறு.

இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மனிதர்களில் மிகக் கெட்டவர்களும் மிகவும் அல்லாஹ்வை நிராகரிப்பவருமாவார்கள். யாராவது இவர்கள் ஈமான் உள்ளவர்கள் என்றோ அல்லது இறையச்சம் உள்ளவர்கள் என்றோ அல்லது நல்ல வம்சாவழியில் உள்ளவர்கள் என்றோ கூறினால் அவர்கள் பற்றிய அறிவில்லாமல் அவர்களுக்கு சான்று கூறுவதேயாகும்.
அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.
وَلاَ تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ
எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் 17:36)

அல் காழி அபூபக்ரில் பாகில்லானி(ரஹ்) அவர்கள் 'இரகசியத்தை வெளிப்படுத்தி முகத்திரையை கிழிப்பது' என்ற தனது பிரபல்லியமான புத்தகத்தில் கூறுகின்றார்கள்:

நெருப்பு வணங்கிகளின் வம்சா வழிகள், இவர்களின் கொள்கை யூத கிறிஸ்தவர்களின் கொள்கையைவிட மிக மோசமானது. அலி(ரலி) அவர்களை கடவுளென்றும் அல்லது அவர்கள் தான் நபியென்றும் வாதிடுபவர்களைவிட மிகவும் கெட்டவர்கள்.

அல் காழி அபூ யஃலா(ரஹ்) அவர்கள் தனது 'அல் முஃதமது' என்னும் புத்தகத்தில குறிப்பிடுகின்றார்கள்.

'மறுமையை மறுப்பவர்கள், இறைநிராகரிப்பாளர்கள்' இன்னும் பல இஸ்லாமிய அறிஞர்களும் இவர்கள் முனாஃபிக்குகள், மறுமையை மறுப்பவர்கள் இஸ்லாத்தை வெளியில் காட்டிகொண்டு உள்ளே குஃப்ரை மறைத்து வைப்பவர்கள், இவர்கள் யூத மற்றும் நெருப்பு வணங்கிகளின் வம்சாவழியினர் என்ற ஒற்ற கருத்தை கொண்டுள்ளனர்.

இவர்கள், ஹிஜ்ரி 362 ரமளான் மாதம் பிறை 5ல் எகிப்தின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்கள்தான் நபி(ஸல்) அவர்கள் மீது பிறந்தநாள் (மீலாது) கொண்டாடுவதை முதலில் ஆரம்பித்தவர்கள். இவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது மாத்திரம் இவர்கள் மீலாது விழாவை ஆரம்பிக்கவில்லை அவர்களின் குடும்பத்தாரான ஃபாத்திமா(ரலி), அலி(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) இன்னும் ரஜப் முதல் இரவு மற்றும் அம்மாதத்தின் நடு இரவை கொண்டாடுவது, அவ்வாறு ஷஃபான் முதல் மற்றும் நடுஇரவு இன்னும் இது போன்ற பல கொண்டாட்டங்களை இவ்வுலகிற்கு முதன்முதலாக அறிமுகம் செய்தவர்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார்கள் மீதும் மீலாது விழா நடத்தியது இஸ்லாத்தையோ நபி(ஸல்) அவர்களையோ நேசித்ததற்கல்ல! இஸ்லாமியப் போர்வையில் இஸ்லாத்தை அழிப்பதற்காகவும் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் உண்மையான அகீதாவை (கொள்கையை) விட்டும் தூரமாக்குவதற்குத்தான்.

மீலாது விழாக்களுக்காக பல இலட்சக்கணக்கான தொகையை உணவுக்காகவும் இனிப்பு பண்டங்களுக்காகவும் அன்பளிப்புகளுக்காகவும் அரசு பணத்தில் செலவு செய்து அன்றைய தினத்தை அரசு விடுமுறையாகவும் பிரகடனம் செய்தார்கள். இவ்வாறு செய்ததினால் அதிக மக்களின் உள்ளங்களிலே அவர்கள் பற்றிய நல்லெண்ணங்களை பெற்றுக் கொண்டார்கள். இதனால் அவர்களுடைய ஆட்சியும் நீண்டது. அவர்களின் கொள்கையும் மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவியது. இதற்காகவே இந்த மீலாது நாடகத்தை அவர்கள் அரங்கேற்றினார்கள்.

அவர்கள் எகிப்தின் ஆட்சியை கைபற்றிய போது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் நெருப்பு வணங்கிகளுக்கு அவர்களின் அரச சபைகளிலும் அரசாங்க வேலை வாய்ப்புகளிலும் இடமளித்தார்கள். மந்திரிகளாகவும் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரான முஸ்லிம்களை கொடுமைப்படுத்தினார்கள். மேலும் அவர்களை தங்களின் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அரசாங்க வேலை வாய்ப்பு பெறுவதற்கு அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொள்வதை நிபந்தனையாக்கினார்கள். இதனால் பல யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஷீஆ (ஷியா) கொள்கையை தங்களின் கொள்கையாக (மத்ஹபாக) ஏற்றுக் கொண்டார்கள். அரசாங்க தொழிலிலுள்ள அனைவரும் அவர்களின் கொள்கையை எற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். நீதிமன்றத்திலுள்ள நீதியரசர்களையும் அவர்களின் கொள்கைப்படியே தீர்ப்பளிக்க வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்தார்கள்.

ஹிஜ்ரி 372ல் எகிப்தை ஆட்சி செய்த பாத்திமிய்யீன்களின் மன்னரான அபுல் மன்சூர் நஸார் இப்னுல் முஇஸ் இப்னுல் காயிம் இப்னுல் மஹ்தி அல் உமைதி என்பவர் ரமளான் மாதத்தில் தொழப்படும் தராவிஹ் தொழுகையை தடைசெய்தார். ஹிஜ்ரி 393ல் லுஹா தொழுத 13 பேரை மூன்று நாட்கள் சிறையிலடைத்து தண்டனையும் வழங்கினார். ஹிஜ்ரி 381ல் முஅத்தா இமாம் மாலிக் என்னும் ஹதீத் கிரந்தம் ஒருவரிடத்தில் இருந்த காரணத்தினால் அவரை ஊரைச்சுற்றவைத்து அவமானப்படுத்தி அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. ஹிஜ்ரி 395ல் எல்லாப் பள்ளிவாசல்களின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் பள்ளியின் கதவுகளிலும் இன்னும் மண்ணறைகளிலும் முன்னோர்களான நபித்தோழர்களையும் நல்லடியார்களையும் அவமதிக்கும் வாசகங்கள் எழுதப்பட்டும் பொறிக்கப்பட்டுமிருந்தது. அவர்களின் கடைசி மன்னரின் ஆட்சி காலம்வரை நபித்தோழர்களை அவர்களின் மிம்பர்களிலும் மேடைகளிலும் ஏசுவது அவர்களின் சின்னமாக காணப்பட்டது.

இத்தோடு அவர்களின் ஆணவத்தை அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் மன்னர்களில் ஒருவரான மன்சூர் இப்னு நஸார் என்னும் அல் ஹாகிம் என புனைப் பெயர் சூட்டப்பட்டவர் தன்னை கடவுள் நிலைக்கே கொண்டு வந்துவிட்டார். மிம்பரில் குத்பா பிரசங்கம் செய்யும் இமாம், இவருடைய பெயரை கூறிவிட்டால் இவரை கண்ணியப்படுத்துவதற்காக மக்கள் எல்லோரும் எழுந்து நின்று விடுவார்களாம். இவரின் பெயர் கூறப்பட்டால் இவருக்காக சுஜுது செய்யும்படி மிஸ்ர் நாட்டு மக்களுக்கு அவர் கட்டளையும் இட்டிருந்தார், அவ்வாறே அம்மக்களும் செய்தார்கள். எந்தளவுக்கென்றால் ஜும்ஆத் தொழுகைகூட தொழாதவர்கள், இவரின் பெயர் கேட்டு அவர்கள் கடைவீதிகளில் இருந்தால் கூட சுஜுதில் விழுந்து விடுவார்களாம்.

அவர்களின் ஆட்சி காலத்தில் மிம்பரிலும் வேறு மேடைகளிலும் நபித்தோழர்களை ஏசினார்கள், சபித்தார்கள். குறிப்பாக மூன்று கலீபாக்களையும் (அபூபக்ர்(ரலி) உமர்(ரலி) உத்மான்(ரலி)) விமர்சித்தார்கள், இம்மூவரும் அலி(ரலி) அவர்களின் பகைவர்கள் எனக் கூறினார்கள்.

ஆறாம் நூற்றாண்டின் கடைசி அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இர்பில் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் முளஃப்பர் அபூ ஸயீத் கோக்பூரி என்பவர் இவர்களுக்குப் பின் மக்கள் மத்தியில் இந்த மீலாது மேடையையும் மெளலிது ஷரீபையும்? மிக பிரபல்லியப்படுத்தினார்.

இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் 'அல்பிதாயா வன்னிஹாயா' என்னும் வரலாற்றுக் குறிப்பில் 'அபூ ஸயீத் கோக்பூரியின்' வரலாற்றைக்கூறும் போது, ரபீவுல் அவ்வல் மாதத்தில் மெளலிது ஓதி மாபெரும் மீலாதுவிழாக் கொண்டாடுவார். இவர் ஏற்பாடு செய்யும் மெளலிது விருந்துபசாரத்தில் சுடப்பட்ட ஐந்தாயிரம் ஆடுகளும் பத்தாயிரம் கோழிகளும் ஒரு இலட்சம் தயிர்க்கோப்பைகளும் முப்பது ஆயிரம் ஹல்வாத் தட்டுக்களும் ஏற்பாடு செய்வார் என்று, இவர் ஏற்பாடு செய்த சில மெளலிது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் கூறினார்கள். இன்னும் ளுஹர் நேரத்திலிருந்து ஃபஜ்ர் நேரம் வரை ஸுஃபியாக்கள் பாட்டுப்பாடுவதற்காக ஒலிபெருக்கிகளை ஏற்பாடு செய்து அவர்களுடன் சேர்ந்து இவரும் நடனமாடுவார். ஆதாரம்: அல்பிதாயா வன்னிஹாயா.

அன்புள்ள சகோதர சகோதரிகளே!இதுதான் மீலாது விழாவின் லட்சணம்! இவர்கள்தான் மீலாது விழாவை உலகிற்கு இறக்குமதி செய்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் முறையா? நிச்சயமாக இல்லை. நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதுதான் அவர்களைப் நேசிப்பதற்கு உண்மை அடையாளமாகும்.

மீலாது விழா கொண்டாடுபவர்கள் எடுத்து வைக்கும் சில சந்தேகங்களும் அதற்குரிய விடைகளும்.

சந்தேகம் -1மீலாது விழாக் கொண்டாடுவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தவதாகும்.

விடை: நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதென்பது அவர்கள் ஏவியதை எடுத்தும், தடுத்ததை தவிர்த்தும் நடப்பதாகும். பித்அத்துக்களையும் பாவங்களையும் செய்வது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதாகாது. மீலாது விழாக் கொண்டாடுவது அந்த பாவமான காரியத்தைச் சேர்ந்ததே. நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை அதிகம் கண்ணியப்படுத்தியவர்கள். அவர்கள் மீலாது மேடை நடத்தவில்லை. மீலாது மேடை நடத்துவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தவதாக இருந்திருந்தால் நிச்சயம் அதை நபித்தோழர்கள் செய்திருப்பார்கள். நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை எந்தளவு கண்ணியப்படுத்தினார்கள் என்பதை பின்வரும் ஹதீது தெளிவுபடுத்துகின்றது.

உர்வா இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கைஸர், கிஸ்ரா, நஜ்ஜாசி மன்னர்களிடம் சென்றிருக்கின்றேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் நபி(ஸல்) அவர்களை நேசிப்பது போல் வேறு எந்த மன்னர்களையும் அவர்களின் தோழர்கள் நேசிப்பதாக நான் பார்க்கவில்லை. (ஹதீஸின் ஒரு பகுதி)ஆதாரம்: புகாரி

இவ்வளவு கண்ணியம் காத்த நபித்தோழர்கள் ஒரு தடவைகூட மீலாது மேடை நடத்தவில்லை. மீலாது மேடை நடத்துவது நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதாக இருந்திருந்தால் நிச்சயம் அதைச் நபித்தோழர்கள் செய்திருப்பார்கள்.

சந்தேகம் -2பல நாடுகளில் அதிக மக்கள் செய்கின்றார்கள்.
விடை: நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்தான் ஆதாரமாகும். மக்கள் செய்யும் செயல்கள் ஆதாரமாக முடியாது, அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சரியே. நபி(ஸல்) அவர்கள் எல்லா பித்அத்துக்களையும் தடுத்துள்ளார்கள். மீலாது மேடையும் அந்த வகையைச் சேர்ந்ததே. மனிதர்கள் செய்யும் செயல்கள் குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சரியே.

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (அல்குர்ஆன் 6:116)


 
Rozor-V3 Copyright © 2011 Razor Theme V3 is Designed by Sameera Chathuranga