Twitter Twitter Delicious Facebook Digg Stumbleupon


காவல் நிலையம் எங்களுக்குப் பெருமை! 0

பொதுவாகவே பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் இடையே நிரப்ப முடியாத ஒரு இடைவெளி நீடிப்பதை அனைவரும் அறிவர்.

காவல் துறைப் பற்றிய பய உணர்ச்சியே மக்களை காவல் துறை வட்டாரத்திலிருந்து விலக்கி வைத்துள்ளது. குற்றவாளிகளும், காவல் துறையும் மட்டுமே உறவாட தகுதியானவர்கள், பிற எவரும் காவல் துறையோடு உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அது பாவம் என்ற மனப்பான்மைக் கூட மக்களில் பலரிடம் இருக்கத்தான் செய்கின்றது.

உண்மையில் சில பொழுதில் - சில இடங்களில் காவல் துறையின் போக்கும் மக்களிடம் இத்தகைய மனப்பான்மை வளர்வதற்கு காரணமாக இருந்துள்ளன.

மற்ற இடங்கள் எப்படியோ நமக்குத் தெரியாது. நமதூர் பரங்கிப்பேட்டை காவல் நிலையம் பற்றி நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆய்வாளர் புகழேந்தி பரங்கிப்பேட்டையில் பொறுப்பேற்றவுடன் சில மாற்றங்கள் நடந்துள்ளன. நடந்தும் வருகின்றன. எளிமையாக எவரும் பொதுத் தேவைகளுக்கு காவல் துறையை அணுகலாம் என்ற வெளிப்படையான மனநிலை இன்று உருவாகி வருகின்றது.

காவல் நிலையத்தின் உள்ளே எழுதப்பட்டுள்ள சுவர் வாசகங்களை உலகிற்கு நாம் காட்டுவோம். "மனித உறவு மேம்பட.." என்ற முத்தான தலைப்புடன் வரையப்பட்டுள்ள வாசகங்கள் காவல் துறைப் பற்றிய மதிப்பை இன்னும் ஆழமாக்குகின்றது.









பயமற்ற மரியாதையான உறவு காவல் துறையுடன் பொது மக்களுக்கு ஏற்பட வேண்டும். குறிப்பாக தீயவர்கள் காவல் துறையுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவை விட நல்லவர்கள் அவர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் நேசத்தாலும், சகோதரத்துவத்தாலும் ஊரில் தீமைகள் குறையவும், காவலர்களின் பணி இன்னும் சீராகவும் வாய்ப்பு ஏற்படும்.

எங்கள் ஊர் காவல் நிலையம் எங்களுக்குப் பெருமை!

0 Responses So Far:

 
Rozor-V3 Copyright © 2011 Razor Theme V3 is Designed by Sameera Chathuranga