Twitter Twitter Delicious Facebook Digg Stumbleupon


பெற்றோர் மாநாடு வீடியோ உரை - 3 1

ஸலாம்.

சகோதரர் CMN சலீமின் உரை முழுவதுமாக பதிவு செய்து வெளியிட முடியவில்லை.

கல்வியில் ஏன் பின்தங்கினோம்?,
யார் காரணம்?,
எத்தகைய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்?,
அதற்கான காலகட்டம் என்ன?,
எவ்வளவு காலம் பொறுத்திருக்க வேண்டு்ம்?, என்ற வரலாற்று குறிப்புகள் கல்விக்காக பாடுபடும் ஒவ்வொருவர் மனதிலும் பதிய வேண்டும். "பள்ளிகளோடு இணைந்த மாதிரி மக்தப்களை உருவாக்குவதே, இழந்த நம் தலைமுறை கல்வி கோட்பாடுகளை மீட்டெடுக்க ஒரே வழி" என்ற சலீமின் அழைப்பு மிகுந்த சக்தி வாய்ந்தது என்பதை நாம் உணர்கிறோம்.

மேலாதிக்க ஆக்ரமிப்பாளர்கள் - ஆங்கிலேயர்கள் - பிரிட்டிஷ்காரர்கள் - உலகின் பலபகுதிகளை தங்களது வன்முறையால் அடிமைப்படுத்தத் துவங்கிய காலகட்டத்தில் முதல் வேலையாக அவர்கள் செய்தது. பள்ளிவாசல்களுடன் இணைந்த கல்விக்கூடங்களை தகர்த்ததுதான் என்ற உண்மையை உரக்க முழங்கினார்.

இஸ்லாமிய அடையாளங்களை, கல்வித்தரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றைய முஸ்லிம்கள் சிந்திய இரத்தமும், உயிரும் எடுத்துக்காட்டப் பட்டபோது மனகணத்துடன் கண்கள் கசிந்தன.

என்ன செய்யப் போகிறோம் என்ற மனக் கேள்வியுடன் அந்த வீடியோவைப் பதிக்கிறேன்.

பெற்றோர் மாநாடு (பிப்ரவரி - 7) 2

ஸலாம்.


பிப்ரவரி 7ம் தேதி நடந்து முடிந்த "பெற்றோர்கள் மாநாடு" வீடியோ பதிவு முதல் பகுதி.


கஸ்ஸாலி இமாமின் இஹ்யாவுல் உலூமித்தீன் புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட ஒரு சம்பவத்தை (அல்லாஹ்வை நினைவுக்கூர்வதற்கென்று நபி(ஸல்) நிறைய திக்ருகளை சொல்லிக் கொடுத்திருக்கும் போது இஹ்யாவிலிருந்து எவரோ சொன்ன திக்ர் தேவையா என்பதை பேச்சாளர் யோசித்திருக்க வேண்டும்) தவிர மற்ற உரைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன.


பெரிய குறைப்பாடுகள் என்று சொல்லும் படி எதுவும் இல்லையென்றாலும் பேச்சாளர்கள் உரை சப்தத்தை விட பெண்கள் தரப்பிலிருந்து பேச்சு சலசலப்பு தொடர்ந்து வந்தன. (வருபவர்களின் முழு கவனமும் பேச்சாளர்களின் பக்கம் இருக்கும் படி ஒளி, ஒலி அமைப்பு, இதர ஏற்பாடுகள் செய்யப்படுவது மிக அவசியமாகும்).


மிக நெடிய திரைப் போட்டு பெண்கள் பகுதியை அடைத்தார்கள். (இத்துனை அடைப்பு அவசியமா என்பது புரியாமலே போய்விட்டது).


ஜிஎன்







 
Rozor-V3 Copyright © 2011 Razor Theme V3 is Designed by Sameera Chathuranga